நிலக்கோட்டையில் இடி தாக்கி தொழிலாளி பலி..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே குளத்துப்பட்டி சேர்ந்த முத்தன். ஆசாரி மகன் முருகன் வயசு 42. இவர் தற்போது குரும்பபட்டி நிலக்கோட்டை அருகே உள்ள கே குரும்பட்டியில்  குடியிருந்து வருகிறார். நிலக்கோட்டையில் தச்சுத்தொழில் தொழிலாளியாகவும் வேலை செய்து வருகிறார்.

இவர் நேற்று இரவு நிலக்கோட்டை அணைப்பட்டி ரோட்டில் உள்ள ஒயின்ஷாப்பில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.                   அப்போது திடீரென பலத்த இடியுடன்  மழையும் பெய்தது.                               இந்த வீடு முருகனின் மேல் விழுந்ததாக கூறப்படுகிறது. இடி தாக்கியதில் அவ்விடத்திலேயே  உயிர் பிரிந்து இரவு நேரத்தில் அங்கேயே கேட்பாரற்ற நிலையில் உடல் கிடந்துள்ளது. பின்னர் காலையில வழியாக சென்றவர்கள் நிலக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் ரேவதிக்கு தகவல் கொடுத்தனர்.

ரேவதி நிலக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். உடனடியாக நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றார்.

இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் முருகனின் மனைவி செல்வி கொடுத்த புகாரின் படி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  நிலக்கோட்டையில் இடி தாக்கியதில் இறந்ததால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..

Be the first to comment

Leave a Reply