மாரண்டஅள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி..

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளியை சேர்ந்தவர் பழனி என்பவரின் மகன் மாதேஷ் 30 வயது தச்சுத்தொழிலாளி செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சித்ரா என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் இருசக்கர வாகனத்தில் ஏர்ரனஅள்ளியிருந்து தேன்கனிக்கோட்டை க்கு புறப்பட்டு சென்ற போது மாரண்டஅள்ளி அருகே நல்லாம்பட்டி சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தார் உடனே பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்

பின்னர் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக சென்று அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…