சவுதி அரேபியா ஜித்தாவில் தமுமுக நடத்திய நோன்பு திறக்கும் நிகழ்ச்சி..

சவுதி அரேபியா மேற்கு மண்டலம் ஜித்தா மாநகரத்தில்சமுதாய சொந்தங்களுடன் தமுமுக இஃப்தார் நிகழ்ச்சி லக்கி தர்பார் உணவகத்தில் மௌலவி அப்துல் காதர் கிராத் ஓத,மாநகர துணை செயலாளர் இலியாஸ் தலைமையில், மண்டல பொறுப்பாளர் அப்துல் மஜித்,மாநகர செயலாளர் ராஜா முஹம்மத், பரக்கத் அலி, அப்துல் அலீம், ஜலால் ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கீழை இர்பாஃன், கஸ்ஸாலி ஆகியோரின் சிற்றுரையை தொடர்ந்து தாயகத்திலிருந்து காணொளி வழியாக, அண்ணல் நபி (ஸல்) வழிகாட்டலில் முஸ்லிம் முஸ்லிமல்லாதார் உறவுகள் என்ற தலைப்பில் தமுமுக மமக மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா சிறப்புரையாற்றினார்..

இந்த நிகழ்ச்சியில் 150க்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டார்கள். இறுதியாக பொறியாளர் ரிள்வான் நன்றியுரை மற்றும் துவாவுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..