குழந்தைகள் உதவிக்கு அழைக்க வேண்டிய எண் 1098…

இன்று நம் குழந்தைகளுக்கு நல்ல வழியை காட்டி நாம் வளர்த்தால் நாளை அவர்கள் நாட்டுக்கே வழிகாட்டியாகத் திகழ்வார்கள். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்காமல் உடனடிக் கவனம் செலுத்தி விரைவில் களையப்பட வேண்டும்

நடைபெறும் குற்றங்களுக்கு காரணமாக விளங்கும் சூழ்நிலைகளை தெரிந்துகொண்டு அவற்றிலிருந்து தங்களது குழந்தைகளை பாதுகாப்பது பெற்றோர்களின் மிக முக்கியமான கடமையாகும். வெளியே செல்லும்போது பிறர் தம்மிடம் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பாகுபடுத்தப் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள் எவை என்பதைக் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் புரியவைக்க வேண்டும்.

சிறுவர்களாக இருந்தாலும், சிறுமிகளாக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தான செயல்கள் எவை என்பதை அவ்வப்போது அவர்களுக்கு உணர்த்த வேண்டும். இவற்றை பெற்றோர்களால் மட்டுமே செய்ய முடியும். அப்படி விரும்பத்தகாத செயல்களால் அவர்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக தங்களுக்குத் தெரியப்படுத்துமாறு குழந்தைகளை அன்புடனும், பரிவுடனும் கேட்டுக்கொள்ள வேண்டும்.

மேலும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குறித்த தகவல்களை அவர்கள் உடனுக்குடன் தகவல் தெரிவிக்க குழந்தைகள் உதவிக்கு : 1098.

மதுரை மாநகர காவல்துறை உதவி எண் 83000-21100 (WHATSAPP) என்ற எண்ணை உதவிக்கு அழைக்க அனைத்து குழந்தைகளுக்கும் பெற்றோர்கள் கற்றுக்தரும்படி மதுரை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..