மதுரை அருகே கோடை வெயிலுக்கு சூடுபிடிக்கும் வெள்ளரிக்காய் வியாபாரம். ஆர்வத்துடன் வாங்கி செல்லும் பயணிகள்…

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பகுதியில் வெள்ளரிக்காய் அதிகம் பயரிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது கோடை வெயில் (அக்கினி வெயில்) வாட்டி எடுத்து வருவதால் வெயிலை தாங்க முடியாமல் அதிக தூரம் பேருந்தில் பயணம் செய்பவர்கள் தாகத்தை தீர்ப்பதற்கு வெள்ளரிக்காயை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக டி.கல்லுப்பட்டி பேருந்து நிலையத்தில் வெள்ளரிக்காய் வியாபாரம் சூடு பிடித்து வருகிறது. வெள்ளரிக்காய் விற்பனை அதிகம் நடைபெறுவதால் வியாபாரிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. வெள்ளரி வியாபாரிகள் தினமும் குறைந்தபட்சமாக 500 லிருந்து 700 வரை லாபம் பார்த்து சம்பாதித்து வருகின்றனர். வியாபாரிகள் விற்பனை செய்யப்படும் வெள்ளரிக்காய் 3 அல்லது 4 வைத்து கட்டுப்போல் உருவாக்கி வெயிலின் தாக்கம் அறிந்து பொதுமக்கள் நலன் கருதி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் அதிக தூரம் பேருந்தில் பயணிப்பவர்கள் 2 அல்லது 4 க்கும் மேற்பட்ட வெள்ளரிக்காய் கட்டுகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

குறைந்தபட்ச விலைக்கு இந்த பகுதியில் வெள்ளரிக்காய் விற்பனை செய்யபடுவதால் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது தமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..