இராமநாதபுரம் மாவட்ட பிளஸ் 1 தேர்வு முடிவுகள்.. 93.33 சதவீதம் தேர்ச்சி..

இராமநாதபுரம் மாவட்டத்தில் 2018-2019-ஆம் கல்வி ஆண்டு பிளஸ் 1 அரசு பொதுத் தேர்வை 6,736 மாணவர்கள், 7,695 மாணவியர்கள் என 14,431 எழுதினர். பள்ளி கல்வித்துறை இன்று (08/05/2019) வெளியான தேர்வு முடிவுகளின்படி தேர்வு எழுதியவர்களில் 6,476 மாணவர்கள், 7,569 மாணவியர் என 14,045 மாணாக்கர்கள் தேர்ச்சி  பெற்றனர்.

மாணவர்கள் 96.14 சதவீதம், மாணவிகள் 98.36 சதவீதம் என மாணவ, மாணவியரின் மொத்த தேர்ச்சி 97.33 சதவீதம் ஆகும். மாநிலத்தில் 7-வது இடம்  பெற்றுள்ளது.  மாவட்டத்தில் 69 அரசுப்பள்ளிகளில் 20 பள்ளிகளும், 36 அரசு உதவிபெறும் பள்ளிகளில் 14 பள்ளிகளும், 43 மெட்ரிக் பள்ளிகளில் 33 பள்ளிகள் என 67 பள்ளிகள் நூறு சதவீதம் பெற்றுள்ளன.  தேர்வெழுதிய 30 மாற்றுத்திறன் மாணாக்கர்களில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றனர் என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..