தொடர்ந்து பத்திரிக்கையாளர் மீது கட்டவிழ்த்து விடப்படும் அராஜகம்… WJUT உட்பட பல்வேறு சங்கங்கள் கண்டனம்…

இன்று (06/05/2019) மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக தமிழக முதல்வர் வந்திருந்தார். முதல்வர் பிரசார காட்சியை செய்தி எடுக்க சென்ற நியூஸ் 18 ஒளிப்பதிவாளர் ராம்குமார், மற்றும் செய்தியாளர் ஸ்டாலின் ஆகியோரை செய்தி சேகரிக்க விடாமல் தடுத்தும் ஒருமையில் பேசியும் அராஜக போக்குடன் கீரைத்துறை ஆய்வாளர் டேவிட் ரவி ராஜன் நடந்துள்ளார்.

நெல்லையில் இப்படி தான் செய்தியாளர்களை கதற வைத்தேன். 4 நாட்கள் போராட்டம் நடத்தினார்கள், என்னை ஒன்று புடுங்க முடியவில்லை. இப்ப மட்டும் புடுங்க போறீங்களா?. என தொடர்ந்து மிரட்டியும் உள்ளார். இருவரையும் கைது செய்துள்ளதாகவும், ஜீப்பில் ஏறும்படியும் கூறியுள்ளார். செய்தியாளர்கள் மறுக்கவே. நீங்க போங்க பின்னாடியே எப்ஐஆர் போட்டுட்டு வீட்டுக்கு வர்றேன் என மிரட்டியுள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்கள் நடந்து வருவது ஒரு பக்கம் வேதனை அளிக்கிறது என்றால். மறுபக்கம் பாதுகாப்பு தரக்கூடிய காவல்துறையே இப்படி நடந்து கொள்வது தமிழக அரசுக்கு தலை குனிவு தான். இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறும் பட்சத்தில் நிச்சயமாக எதிர்ப்புகளை அரசின் முன் எடுத்து வைக்கப்படும் என பத்திரிக்கை சங்கங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக WJUT (WORKING JOURNALIST UNION OF TAMIL NADU) “தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்” மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ் மற்றும் மாநில பொதுச் செயலாளர் ஆர். சந்திரிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நமது சங்கத்தின் சார்பாக தமிழ் நாடு காவல்துறை இயக்குனர் அவர்களிடம். ஆய்வாளர் டேவிட் ரவிராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கவுள்ளோம். தமிழக அரசே போராட தூண்டாதே ஆய்வாளர் மீது நடவடிக்கை எடு என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..