“நோன்பு கஞ்சி”.. கடல் கடந்து அமீரகத்தில் அனைத்து மக்களுக்கும் வழங்கி வரும் ஈமான் அமைப்பு..

நோன்பு என்றாலே பொதுவாக தமிழக மக்களின் மனதில் எழுவது நோன்பு திறக்க பள்ளிகளின் வழங்கப்படும் நோன்பு கஞ்சிதான். பல நூறு ஆண்டு காலமாக இது ஒரு பாரம்பரியமாகவே அனைத்து தொழுகை பள்ளிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. இது ஒரு பாரம்பரியம் என்பதை விட வறுமையில் உள்ள மக்களுக்கு நோன்பு காலமான 30 நாட்களுக்கும் நல்ல உணவாகவும் அமைந்திருக்கும் என்றால் மிகையாது.

காலங்கள் மாறி மக்கள் இடம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு, அதுவும் முக்கியமாக வளைகுடா நாடுகளுக்கு பணி நிமித்தமாக சென்ற பிறகு நோன்பு காலங்களில் நோன்பு கஞ்சியின் தேவையை அறிந்து கீழக்கரையை சார்ந்த தனியார் தொழில் நிறுவனத்தை சார்ந்தவார்கள் துபாய் தேரா பகுதியில் உள்ள தொழுகை பள்ளியில் நோன்பு கஞ்சி வழங்க ஆரம்பித்தது இன்று மிகப்பொிய நிகழ்வாக நடைபெறுகிறது என்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.. அன்று சிறிய அளவில் தொடங்கிய அப்பணி இன்று வருடந்தோறும் ரமலான் மாதங்களில் நோன்பு திறக்கும் சமயத்தில் சுமார் 6000 பேருக்கு நோன்பு கஞ்சி மற்றும் நோன்பு திறக்கும் திண்பண்டங்களும் வழங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது..

சாதாரண நபராக வெளியில் இருந்து பார்க்கும் பொழுது நோன்பு கஞ்சி வினியோகமாக தொிந்தாலும் இதற்கு பின்னால் பெரும் குழுவே இப்பணியை சிறப்பாக செயல்படுத்த இயங்கி வருகிறது. ஆரம்ப காலத்தில் சில தனிநபர்களால் செய்யப்பட்டு வந்த இப்பணி பின்னர் ஈமான் என்ற அமீரக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ அமைப்பின் மூலம் இப்பணிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. தற்சமயம் இவ்வமைப்புக்கு கீழக்கரையைச் சார்நத பி.எஸ.எம் ஹபீபுல்லாஹ் தலைவராகவும், பொதுச் செயலாளராக ஹமீது யாசீன் மற்றும் இன்ன பிற உறுப்பினர்களை உள்ளடக்கி கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

இந்த நோன்பு கஞ்சி வினியோகம் செய்வதற்கான பணி நோன்பு தொடங்குவதற்கு பல மாதங்கள் முன்பே தொடங்கி, அதற்கான பிரத்யேக நிர்வாக குழுக்கள் அமைக்கப்பட்டு செய்யப்பட்டு வருகிதறது. மேலும் இப்பணியில் மாற்று நம்பிக்கை கொண்ட சகோதரர்களும் தன்னார்வலர்களாக இணைந்து பணியாற்றுவது மிகவும் சிறப்பான விசயமாகும்.

மேலும் ஈமான் அமைப்பு நோன்பு கஞ்சி வழங்குவதுடன் மற்றும் நிறுத்திவிடாமல் நோன்பு காலம் முழுவதும் துபாய் தேராவில் உள்ள குவைத் பள்ளி என அழைக்கப்ப?டும் லூத்தா பள்ளியில் தினம்தோறும் இரவு தொழுகைக்கு பிறகு சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியும் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்திருப்பது சிறப்பம்சமாகும்.

இவ்வமைப்பின் சீரிய பணி சிறக்க வாழ்த்துவதில் கீழைநியூஸ் – சத்தியபாதை இதழ் நிர்வாகம் மகிழ்ச்சி அடைகிறது.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..