மதுரை பைபாஸ் சாலையில் எரிக்கப்படும் குப்பைகளால் ஏற்படும் பெரும் சுகாதார கேடு..

மதுரை பைபாஸ் சாலையில் தனியார் குடியிருப்பு உள்ள குப்பைத் தொட்டிகளில் மாநகராட்சி ஊழியர்கள் பாதி குப்பையை எடுத்துவிட்டு மீதி குப்பையை எரித்து விட்டு செல்கிறார்கள்.  இதனால் புகைமண்டலம் ஆகி மூச்சுத் திணறல் ஏற்பட்டு,  மாசுபடுவதுடன் பொதுமக்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

அப்பகுதி மக்கள் நகராட்சி ஊழியர்களை விசாரித்த பொழுது  வாகனத்தில் இடமில்லை என்ற பொறுப்பில்லாத பதிலே கிடைக்கிறது.  மேலும்  அடுத்த முறை வந்து எடுத்துச் செல்ல வேண்டியது தானே என்று கேட்டதற்கு அவ்வாறு கொண்டு செல்ல அனுமதியில்லை என    முன்னுக்கு பின் முரணாக பதில் தருகிறார்கள். ஆணையரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என கூறியவுடன்,   உடனடியாக சென்று தீயை அணைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மேலும் மாநகராட்சி ஊழியர்களுக்கு முறையான வாகனம் மற்றும் உபகரணங்களும் வழங்கப்படாததும் இதுபோன்ற காரியங்களில் அவர்கள் ஈடுபட காரமாக உள்ளது என்பதை மறுக்க முடியாது. அது போல விவசாய பயன்பாட்டில் உள்ள டிராக்டர்களும் குப்பை அள்ள பயன்படுத்தபடுகிறது என்பது கூடுதல் தகவலாகும். இதற்கு மதுரை மாநகராட்சி நிர்வாகம் நிரந்த தீர்வு காண வேண்டும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..