மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும்-TARATDAC வடமதுரை நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்…

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் வடமதுரை ஒன்றிய கிளை நிர்வாகிகள் கூட்டம் 05.05.19 அன்று மாலை 05.00 மணியளவில் சித்துவார்பட்டியில் உள்ள காஜா திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

சங்கத்தின் வடமதுரை ஒன்றிய தலைவர் சிவா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பகத்சிங், வடமதுரை ஒன்றிய செயலாளர் கருப்பையா, மாவட்டக்குழு உறுப்பினர் பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முப்பதுக்கும் மேற்பட்ட கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூபாய் ஆயிரம் வழங்கி வருகிறது. இவ்வாறு தமிழக அரசு வழங்கும் உதவித்தொகை கிடைக்காமல் வடமதுரை ஒன்றியத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்ப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மனு செய்து ஆண்டுக்கணக்கில் காத்திருக்கின்றனர்.

இவ்வாறு மனு செய்து காத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்தவுடன் போர்க்கால அடிப்படையில் உடனடியாக உதவித்தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..