Home செய்திகள் தமிழ் சினிமாவில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள் – இயக்குநர்களுடன் கலந்துரையாடல்..

தமிழ் சினிமாவில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள் – இயக்குநர்களுடன் கலந்துரையாடல்..

by ஆசிரியர்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக ஊடகத்துரை சார்பாக 2019 மே 4 ஆம் நாள் சென்னை கவிக்கோ மன்றத்தில் ‘தமிழ் சினிமாவில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள்’ நிகழ்வு  நடந்து முடிந்தது.

இந்நிகழ்ச்சியில் டாக்டர் ஸலாஹுதீன் வரவேற்றுப் பேசினார். மாநிலத் தலைவர் ஷப்பீர் அஹமத் அவர்கள் தொடக்கவுரை நிகழ்த்தினார்கள். இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், மீரா கதிரவன், லெனின் பாரதி, தாமிரா, கோபி நைனார், ராஜு முருகன், மாரி செல்வராஜ், அனீஸ் ஆகியோர் மனம்திறந்த விரிவான கருத்துரைகளை வழங்கினர். கவிஞர் மனுஷ்ய புத்திரன் தொகுப்புரை நிகழ்த்தினார். கவிஞர் யுகபாரதி நிறைவுரை வழங்கினார். இந்த நிகழ்வை மாநில ஊடகச் செயலாளர் வி.எஸ். முஹம்மத் அமீன் தொகுத்து வழங்கினார்.

இருபதுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி, வலைதள தொலைக்காட்சிகள் இந்த நிகழ்வைப் பதிவு செய்து பலதளங்களில் செய்திகளைக் கொண்டு சேர்த்தன. ஒரே நாளில் இலட்சக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வைப் பார்த்ததுடன், பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முஸ்லிம்கள் வாழ்வியல் குறித்த வாத விவாதங்களை திரையுலகிலும், முஸ்லிம் சமூகத்திலும் இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!