மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… 22 பேர் படுகாயம்…

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த 30 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா செல்வதற்கு  ராஜபாளையத்திலிருந்து சுற்றுலா பேருந்து மூலம் புறப்பட்டு  மேட்டுப்பாளையம் வந்தனர். மறுநாள் காலை புறப்பட்டு ஊட்டி சென்று சுற்றி பார்த்துவிட்டு மதியம் 2.30 மணிக்கு ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக சொந்த ஊர் புறப்பட்டனர்,பேருந்தினை ராஜபாளையத்தை சேர்ந்த முத்துராஜ்(44) என்பவர் ஒட்டி வந்தார். மாலை 4.30 மணிக்கு மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு 2 வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்த போது ஓட்டுநர் முத்துராஜின் கட்டுபாட்டை இழந்த வாகனம் 30 அடி பள்ளத்தில் விழுந்தது.

இந்த சம்பவம் குறித்து அந்த சாலை வழியே சென்றவர்கள் மேட்டுப்பாளையம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற மேட்டுப்பாளையம் காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இவ்விபத்தின் போது பேருந்தில் பயணித்த ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என 22பேர் காயமடைந்தனர். மேலும் படுகாயமடைந்து மோசமான நிலையில் இருந்த 5பேர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து மேட்டுப்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

படுகாயம் அடைந்த முத்தம்மாள், சித்ராதேவி, ராஜவேல், மகாலிங்கம், சங்கரேஸ்வரி, வெள்ளதுரைச்சி முத்து ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..