சவுதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இன்று இரவு (05/05/2019) ரமலான் மாதம் தொடக்கம்… இந்தியா உட்பட ஆசிய நாடுகளில் நாளை(06/05/2019) இரவு துவங்குகிறது..

இஸ்லாமிய மாதத்தின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம், முஸ்லிம் சமுதாய மக்களின் மிகவும் புனிதமான மாதங்களில் ஒன்றாகும்.  இம்மாதத்தில் இஸ்லாமிய மக்கள் முப்பது நாட்கள் நோன்பு இருந்து, ஏழை எளிய மக்களுக்கு தான தர்மங்கள் வழங்கி, தீய காரியங்களில் இருந்து முற்றுமாக விலகி தூய்மைபடுத்த கூடிய மாதமாக ஏற்று நடப்பார்கள்.

இந்த முப்பது நாட்கள் கழிந்த பின்பு வரும்  மாதத்தின் முதல் நாளே “ஈகை திருநாள்” எனப்படும் நோன்பு பெருநாளாகும்.  நோன்பின் முதல் நாள் பிறையை பார்த்து தொடங்கப்படும், அதன் அடிப்படையில் ஷவ்வால் மாதம் 30 நாட்கள் பூர்த்தியடைந்ததை தொடர்ந்து இன்று (05/05/2019) சவுதி அரேபியா, மத்திய கிழக்கு நாடுகளில் ரமலான் மாதம் தொடங்கியது.  ஆனால் இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் ஷவ்வால் மாதம் 29ம் நாளான இன்று (05/05/2019) பிறை தென்படாததால் நாளை (06/05/2019) இரவு முதல் ரமலான் தொடங்குவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..