Home செய்திகள் சினிமாவில் மார்க்கெட் போனதால் கமலஹாசன் அரசியலுக்கு வந்துள்ளார் அமைச்சர் கே.டி..ராஜேந்திரபாலாஜி பேட்டி..

சினிமாவில் மார்க்கெட் போனதால் கமலஹாசன் அரசியலுக்கு வந்துள்ளார் அமைச்சர் கே.டி..ராஜேந்திரபாலாஜி பேட்டி..

by ஆசிரியர்

ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மோகனுக்கு  ஆதரவாக பால்வளத்துறை அமைச்சர்  கே.டி.ராஜேந்திரபாலாஜி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஓட்டப்பிடாரம் தொகுதியில் தங்கி தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். புதியம்புத்தூர் சீனிவாசன் நகரில் வாக்குச்சாவடி முகவர்கள், நிர்வாகிகளிடம் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது, விருதுநகர் அல்லம்பட்டி யில் காமராஜர் சிலை அருகே மதுக்கடை இருப்பதாக நாம் தமிழர் கட்சி காளியம்மாள் புகார் தெரிவித்திருந்தார். அந்த புகாரை தொடர்ந்து அந்த கடையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நேற்று இரவே அந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் இது போன்று தலைவர்களின் சிலையின் அருகே கடைகள் இருந்தால் எங்கள் கவனத்திற்கு வந்தால் அந்த மதுக்கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கருணாநிதி மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓட்டப்பிடாரம் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் என்னிடம் தெரிவித்தனர். தருவைகுளம் கிராமத்தில் நாங்கள் வாக்கு சேகரிக்க சென்ற போது காலம் காலமாக திமுகவுக்கு வாக்களித்த ஒரு பெரியவர் என்னிடம் கூறும்போது கருணாநிதியை உயர் சிகிச்சைக்கு வெளிநாடு கொண்டு செல்லாமல் இங்கேயே வைத்து சரியான சிகிச்சை கொடுக்காமல் அவர் இறந்து விட்டார் என்றும் அவரது மரணத்திற்கு விசாரணை நடத்த வேண்டும் என்றும் இனி இரட்டை இலை சின்னத்திற்கு தான் வாக்களிப்போம் என்றும் என்னிடம் அந்த முதியவர் தெரிவித்தார்.

ஓட்டப்பிடாரம் தொகுதி  திமுகவினரின் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் தேர்தல் முடிந்தவுடன் கருணாநிதி மரணத்தில் மரணம் குறித்து  தமிழக முதல்வர் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க உத்தரவிடுவார்.  தமிழக முதல்வர் உறுதியாக நடவடிக்கை எடுப்பார் .கருணாநிதி பேசியிருந்தால் மு.க. ஸ்டாலினை கட்சியிலிருந்து நீக்கி இருப்பார் .ஓட்டப்பிடாரம் தொகுதி மக்கள் என்றுமே அதிமுக விசுவாசிகள். இந்த தேர்தலிலும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து அதிமுக வேட்பாளர் மோகனை மாபெரும் வெற்றி பெற செய்ய வைப்பார்கள் கமலஹாசனுக்கு 65 வயதுக்கு பிறகு அரசியல்  ஞான உதயம் பிறந்துள்ளது.. ஓடி ஆடி விளையாடிய  வயதில் உல்லாசமாக இருந்துவிட்டு தற்போது மார்க்கெட் போனதால் அரசியலுக்கு வந்துள்ளார்.. பிரச்சாரத்திற்கு வடிவேலு  வந்தால் கூட அவரைப் பார்க்க கூட்டம் சேரத் தாண் செய்யும். அதுபோலதான் கமலஹாசனை பார்ப்பதற்காக இப்போது மக்கள் வருவார்கள். ஆனால் அவரது கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!