7, 8, 9, பிளஸ் 1 மாணாக்கர் விளையாட்டு விடுதியில் சேருவதற்கான தேர்வு போட்டிகள் விண்ணப்பிக்க கடைசி நாள் மே 7..

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் பள்ளிகளில் பயிலும்  மாணவ, மாணவியருக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் மாணவருக்கான விளையாட்டு விடுதிகள் மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சை, அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம்,
ஊட்டி, விழுப்புரம், சென்னை, நெய்வேலி, நாமக்கல் மாணவர் விளையாட்டு விடுதிகளும், ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, சென்னை ஆகிய  இடங்களில் மாணவியர் விளையாட்டு விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன. விளையாட்டு விடுதிகளில் 7, 8, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான தேர்வு மே 8 முதல் 10 வரை நடைபெறவுள்ளது.

மாணவர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வோண்டோ, வாலிபால், பளுதூக்குதல், கபடி, மேஜைப்பந்து, டென்னிஸ். ஜுடோ, ஸ்குவாஷ், வில்வித்தை போட்டிகள் நடைபெறவுள்ளன.

மாணவியர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து வாள்சண்டை, கைப்பந்து, ஹாக்கி, நீச்சல். டேக்வோண்டோ, வாலிபால், பளுதூக்குதல், கபடி. டென்னிஸ், ஜுடோ, ஸ்குவாஷ் போட்டிகள் நடைபெறவுள்ளன.

மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுடைய மாணவ, மாணவியர்  உரிய படிவங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதள  முகவரியில் பூர்த்தி செய்து 07.05.2019 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்ட அளவிலான விளையாட்டு விடுதி தேர்வுப் போட்டிகள்  10.05.2019 காலை 7 மணியளவில் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இதை இராமநாதபுர மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal