திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் பல நாட்களாக குடி தண்ணீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்…

May 3, 2019 0

திண்டுக்கல் மாநகராட்சி 1-வது வார்டு பழநி ரோடு கருணாநிதி நகர் பகுதியில் பல நாட்களாக குடி தண்ணீர் வராததாலும் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், அதை அதிகாரிகள் அலட்சியப்படுத்திய மெத்தன போக்கை கண்டித்தும் பழநி […]

கொடைக்கான‌ல் அருகே குறிஞ்சிந‌க‌ர்ப‌குதியில் நீரோடையில் ப‌ந்து எடுக்க‌ சென்ற பள்ளி மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி பலி..

May 3, 2019 0

திண்டுக்கல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌லில்குறிஞ்சி ந‌க‌ர் ப‌குதியில் கீழ் ச‌ர்வே ந‌ம்ப‌ர் ப‌குதியை சேர்ந்த‌ ஆன‌ந்த், த‌னுஸ், ஜெக‌தீஸ் ஆகியோர் பள்ளி விடுமுறையை ஒட்டி அப்ப‌குதியில் உள்ள‌ நீரோடையில் த‌னது ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் 5 பேர்  உட‌ன் விளையாடி கொண்டிருந்த‌ன‌ர். அப்போது நீரோடையில் ப‌ந்து எடுக்க‌ சென்றுள்ள‌ன‌ர். அப்போது எதிர்பாராத‌ வித‌மாக‌ நீரில் த‌வ‌றி விழ்ந்துள்ள‌ன‌ர். இத‌னை க‌ண்ட‌ அருகில் இருந்த‌வ‌ர்க‌ள் தீய‌ணைப்பு துறையினருக்கு த‌க‌வல் அளித்த‌ன‌ர். ச‌ம்ப‌வ‌ இட‌த்திற்கு வ‌ந்த‌ தீய‌ணைப்பு துறையின‌ர் நீண்ட‌ நேரம்போராடி  நீரில் மூழ்கி இற‌ந்த‌  ஆன‌ந்த், த‌னுஸ், ஜெக‌தீஸ் ஆகிய மூவ‌ரை மீட்ட‌ன‌ர். தொட‌ர்ந்து அவ‌ர்கள‌து உட‌லை கொடைக்கான‌ல் அர‌சு ம‌ருத்துவ‌ம‌னைக்கு பிரேத ப‌ரிசோதனைக்காக‌ எடுத்து சென்ற்ன‌ர். சாலை வசதி இல்லாததே மூவர் இறப்பிற்குகாரணம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இச்ச‌ம்ப‌வ‌ம் அப்ப‌குதி ம‌க்க‌ளிடையே பெரும் சோக‌த்தை ஏற்ப‌டுத்தி உள்ள‌து. இது குறித்து கொடைக்கான‌ல் போலீசார் விசார‌ணை மேற்கொண்டு வ‌ருகின்ற‌னர்.

தமிழ் கலைகளை காக்க லண்டனில் ‘பூபாள ராகங்கள்’..!

May 3, 2019 0

புலம்பெயர்ந்து வசிக்கும் மக்களிடையே தமிழ் கலைகளின் அடையாளம் பேணும் விதமாகவும், பள்ளிக்கூட வளர்ச்சி நிதிக்காகவும், ஈழத் தமிழ்க் கலைஞர்கள் கலந்துகொண்ட கலைநிகழ்ச்சி லண்டனில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் கொம்மந்தறை கம்பர்மலை வித்தியாலயம் பழைய மாணவர் சங்கம் […]

ஓட்டப்பிடாரம் இடைதேர்தலுக்கு அதிமுக, பா.ஜ.க மற்றும் மக்கள் நீதி மய்யம் பிரச்சாரம்…

May 3, 2019 0

திட்டங்களை கொடுப்பவர் எடப்பாடி, அதை தடுப்பவர் ஸ்டாலின் ” : அமைச்சர் காமராஜ் பேச்சு ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஒன்றியம், மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட தாளமுத்துநகர் பகுதியில்  உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் […]

திருச்செந்தூர் வைகாசி விசாகம் ; மே-18 ம் தேதி தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை !

May 3, 2019 0

தூத்துக்குடிமாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாகதிருவிழாவைமுன்னிட்டு18.05.2019 அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம் […]

பாலக்கோடு பஸ் நிலையத்தில் மான் கறி விற்றதாக இருவர் கைது..

May 3, 2019 0

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ்நிலையத்தில் மான்கறி விற்பனை செய்ததாக ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்(50), ஆனந்தன்(40) ஆகிய இருவரிடமிருந்து 6கிலோ மான்கறி பறிமுதல். 40ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து  இருவரையும் எச்சரிக்கை விடுத்து பாலக்கோடு […]

இராமநாதபுரத்தில் ரூ.14.80 லட்சம் நில மோசடி திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் கைது..

May 3, 2019 0

இராமநாதபுரம் மறவர் தெருவைச் சேர்ந்தவர் சேகர், 54. இதே பகுதியைச் சேர்ந்தவர் வரதன்,38. தி.மு.க., தொண்டரணி துணை அமைப்பாளராக உள்ளார். இவர் சேகருக்கு மறவர் தெருவில் 3 சென்ட் நிலம் வாங்கி தருவதாக வரதன் கூறியுள்ளார். […]

7, 8, 9, பிளஸ் 1 மாணாக்கர் விளையாட்டு விடுதியில் சேருவதற்கான தேர்வு போட்டிகள் விண்ணப்பிக்க கடைசி நாள் மே 7..

May 3, 2019 0

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் பள்ளிகளில் பயிலும்  மாணவ, மாணவியருக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் மாணவருக்கான விளையாட்டு விடுதிகள் மதுரை, திருச்சி, […]

பேர்ணாம்பட்டு அருகே 5 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு…

May 3, 2019 0

பேரணாம்பட்டு சாத்கர் அரவட்லா காடுகளில் டி எஸ் பி சரவணன் தலைமையில் 5ooo லிட்டர் சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு காவல்துறை அடுத்து சாத்கர் மற்றும் அரவட்லா காடுகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு பல்வேறு […]

மதுரை புதுமாகாளி பட்டி ரோடு அருகே ஒருவர் வெட்டி கொலை..

May 3, 2019 0

மதுரை மாவட்டம் புது மாகாளி பட்டி ரோட்டில் தேவர் சிலை அருகே இன்று (03/05/2019) மதியம் 2 மணி அளவில் மர்ம நபர்களால் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் […]