தீவிர சோதனைக்கு பிறகே வேளாங்கண்ணி ஆலயத்திற்குள் அனுமதி..!

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு எதிரொலியால், தீவிர சோதனைக்கு பின்னரே, பக்தர்கள் வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இலங்கையில், கடந்த ஈஸ்டர் பண்டிகையின்போது நடந்த தொடர் தற்கொலை குண்டு வெடிப்பு காரணமாக, நாகை மாவட்ட கடலோர பகுதிகள் போலீஸாரின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. வெளி நபர்கள் நடமாட்டம், கடல் பகுதியில் அன்னியர் ஊடுருவல், தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்திற்கு வரும் பக்தர்கள், மெட்டல் டிடெக்டர் மற்றும் வெடிகுண்டு சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அத்துடன், தேவாலய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய 50 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து, வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலய பாதிரியார் டேவிட் தன்ராஜ் கூறுகையில், “மாவட்ட நிர்வாகம், தேவாலயத்திற்கு சிறப்பான பாதுகாப்பு பணியை செய்துள்ளது. பக்தர்கள் எவ்வித அச்சமும், இடையூறும் இன்றி வழிபாடு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..