கீழை நியூஸ் – சத்தியபாதை மாத இதழ் அறிமுக விழா.. சத்தியபாதை கல்வி தர்ம அறக்கட்டளை பரிசளிப்பு விழா..

கீழக்கரை உசைனியா மஹாலில்  27.04.19 அன்று மாலை சத்தியபாதை கல்வி அறக்கட்டளை சார்பாக சத்திய பாதை மாத இதழின் அறிமுக விழாவும்,+2வில் அதிக மதிப்பெண் எடுத்த கீழக்கரை பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவியரை  கௌரவப்படுத்தும் விதமாக சான்றிதழ், கேடயம் மற்றும் பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

இந்த நிகழ்வை மக்கள் நல பாதுகாப்பு கழகம் முகைதீன் இப்ராஹிம் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் தலைமையுரையை ரோட்டரி உறுப்பினர் செல்வநாராயணன் வழங்கினார். அதைத் தொடர்ந்து கீழக்கடாரம் ஜமாஅத் தலைவர் வாழ்த்து வழங்கினார்.  பின்னர்  சத்தியபாதை மாத இதழை அதன் நிறுவனர் செய்யது ஆப்தீன் வெளியிட கீழக்கரை வர்த்தக சங்க தலைவர் சாகுநீ  பெற்றுக் கொண்டார்.

பின்னர் சத்தியபாதை இதழின் ஆசிரியர் மற்றும் சத்தியபாதை அறக்கட்டளையின் நிர்வாக செய்யது ஆப்தீன் கூறுகையில் “என் தந்தையின் ஆசியுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சத்திய பாதை அறக்கட்டளையின் மூலம் படிக்கும் மாணவர்களுக்கு உதவிடும் நோக்கில் செயல்படும். மேலும் வரும் காலங்களில் வருடம்  +2மாணவர்கள் மட்டுமின்றி 10ம் வகுப்பு மாணவ மாணவியரையும் கௌரவிக்கும் நிகழ்வு வருடந்தோறும் நடைபெறும்” என்றார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஆசிரியை ஆபிதா, வில் மெடல்ஸ் கலைவாணி, வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் ரஃபீக், சத்தியபாதை இதழ் சட்ட ஆலோசகர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் ஆகியோர் சத்தியபாதை அறக்கட்டளையின் செயல்பாடுகளை நினைவுகூர்ந்து சிறப்புரையாற்றினர்.

நிகழ்வின் தொடர்ச்சியாக கீழக்கரையில் படித்த 12ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பெற்றோர்கள் முன்னிலையில் நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர் மூலமாக  பரிசு,  நற்சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மாணவ, மாணவிகளின் விபரங்கள் கீழே வருமாறு:-

N.ஃபத்தையா பேகம், 577/600, ஹமீதியா பெண்கள் மேல் நிலைப்பள்ளி,

S.ஆமினத் நிஸ்ஃபா, 563/600 ஹமீதிய்யா ஆங்கில வழி மேல் நிலைப்பள்ளி

K.ரிஃபத் ஹசினா, 562/600, இஸ்லாமியா ஆங்கில வழி மேல்நிலைப்பள்ளி

M.சுவாதி, 533/600, ஹைரத்துன் ஜலாலியா மேல் நிலைப்பள்ளி

B.செய்யது ரசியம்மாள், 519/600 மக்தூமியா மேல்
நிலைப்பள்ளி

R.தருண் சாய்ராம், 509/600 ப்யர்ல் ஆங்கில வழி மேல்நிலைப்பள்ளி

A.ஆதித்யன்., 496/600, ஹமீதியா ஆண்கள் பள்ளி மேல்நிலைப்பள்ளி

M.ஃபாத்திமா ஃபவுமினா, 492/600, முகைதீனியா ஆங்கில வழி மேல்நிலைப்பள்ளி

ஹைருன் இபாதா, 458/600, தீனிய்யா ஆங்கில வழி மேல்நிலைப்பள்ளி

அத்துடன் கீழக்கரையில் சமூக அக்கறை கொண்டு  சமூக   பணி செய்து வரும் இரட்டை சகோதரர்களான கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை ஆம்புலன்ஸ் (மற்றும்) நாசா அறக்கட்டளை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுகள் நசுரூதீன், அசாருதீன், மற்றும் பிரவின் மூவரும் பரிசு, நற்சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வின் இறுதியாக கீழக்கரை கிழக்கு தெரு ஜமா அத் துணை தலைவர் அஜிஹர் நன்றியுரை வழங்கினார்.

மேலும் இத்தருணத்தில் இந்நிகழ்வின் வெற்றிக்கு அரும்பாடு பட்ட மக்கள் டீம் காதர் மற்றும் மக்கள் தல கழகம் முகைதீன் இபுராஹிம் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதில் கீழை நியூஸ் சத்தியபாதை நிர்வாகம் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறது.

To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…