செயலிழந்து கிடக்கிறதா கீழக்கரை நகராட்சி நிர்வாகம்??..

கீழக்கரையில் எத்தனை தலைமைகளும், தலைவர்களும் மாறினாலும், சுகாதாரத்தின் தலையெழுத்து மட்டும் மாறிவதில்லை.  ஆயிரம் வாக்குறுதிகளோடு வீட்டுப்படி ஏறி வரும் அரசியல்வாதிகள், கீழக்கரையில் நிகழும் சுகாதார கேடு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதாகவே தெரியவில்லை.

கீழக்கரையில் எத்திசை நோக்கிணாலும் குப்பை மேடு தான் தென்படுகிறது.  கீழக்கரையின் நுழைவில் தொடங்கி 21வது வார்டு, வடக்கு தெரு, சாலை தெரு, சொக்கநாதர் கோவில் தெரு, கோகோ தெரு, 500 பிளாட் என, இந்த பகுதியில்தான் குப்பை இல்லை என கூற முடியாத அளவுக்கு குப்பை மேடுகள்.

இதுபற்றி மக்கள் டீம் காதர் கூறுகையில், இது சம்பந்தமாக பல் வேறு கோரிக்கைகள் நகராட்சி நிர்வாகத்திற்கு வைத்து விட்டோம், ஆனால் நிரந்தர தீர்வு என்பது எட்டா கனியாகவே உள்ளது.  வரி வசூல் செய்வதில் மட்டும் தீவிரத்தையும், அராஜக போக்கையும் கையாளும் நகராட்சி நிர்வாகம், சுகாதார பணிகளில் மந்தமாகவே இருக்கிறது.  அதே போல் சில பகுதிகளில் அப்பகுதி மக்களே குப்பை போடும் தொட்டியை அகற்ற கூறுகிறார்கள், பின்னர் அதே இடத்தில சாலையில் குப்பையை கொட்டுகிறார்கள்.  ஆகையால் பொது மக்களும் இந்த விசயத்தில் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது அவசியம்” என கூறி முடித்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..