தமிழகத்தில் மது அருந்துவதால் கல்லீரல் நோய் பாதிப்புகள் அதிகரிப்பு…

இந்தியாவில் இறப்பு ஏற்படுவதற்கான மிகவும் பொதுவான காரணங்களில் கல்லீரல் நோய்கள் 10வது இடத்தில் உள்ளன. இந்தியாவில் 10 ல் 1 நபருக்கு கல்லீரல்  கொழுப்பு நோய் உள்ளது.
இந்தியாவில் ஏறக்குறைய 10 லட்சம் நோயாளிகளுக்கு கல்லீரல் கரணை நோய் இருப்பதாக ஒவ்வோராண்டும் புதியதாக கண்டறியப்படுகிறது. ஹெபடோசெல்லுலார் கார்சினோமா அல்லது கல்லீரல் புற்றுநோய் என்றவேகமாக பரவும் புற்றுநோய்உலகில் இறப்பு ஏற்படுவதற்கு மிகவும் பொதுவான காரணங்களில் இரண்டாவது இடம் வகிக்கிறது.
மதுரை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (MMHRC), தமிழ்நாட்டில் மிகவும் அதிகமாக காணப்படும் கல்லீரல் நோய்கள் மற்றும் அதன் சிக்கல்கள் குறித்த  விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஊடக உணர்வாக்க பயிலரங்கு ஒன்றை ஏற்பாடு செய்தது. இது, கல்லீரல் தொடர்பான நோய்கள்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தஒவ்வோராண்டும் ஏப்ரல் 19 அன்று ‘உலக கல்லீரல் தினமாக’ அனுசரிக்கப்படுவதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் கல்லீரல் நோய் அதிகரித்துவருவதை சம்பவத்தை எடுத்துரைத்த மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர்கள் பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், “இந்தியாவில் இறப்பு ஏற்படுவதற்கு மிகவும் பொதுவான காரணமாக விளங்கும் நோய்களில் கல்லீரல் நோய் 10வது இடத்தை வகிக்கிறது என்று WHO தெரிவிக்கிறது. இந்தியாவில் ஏறக்குறைய 5 நபர்களில் 1 நபருக்கு கல்லீரலில் மிகை கொழுப்பும் மற்றும் 10 நபர்களில் 1 நபருக்கு கல்லீரல்கொழுப்பு நோயும் உள்ளது. மேலும், இந்தியாவில் நீரிழிவு நோய் உள்ளவர்களில் மூன்றில் இரண்டு மடங்கு நபர்களுக்கு கல்லீரல் கோளாறும் உள்ளது. தமிழ்நாட்டில் மிகவும் பொதுவாக நிலவும் கல்லீரல் நோய்களில் ஹெபடைடிஸ் பி மற்றும் சி வைரஸ் மற்றும் கொழுப்பு கல்லீரல் காரணமாக நாள்பட்ட வைரல் ஹெபடைடிஸ், மது சார்ந்த கல்லீரல் நோய்கள் குறிப்பிடத்தக்கவை. மது சார்ந்த கல்லீரல் நோய்களை முன்னதாக ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படுமானால், அதை முற்றிலுமாக குணப்படுத்த முடியும்,” என்றனர்.
கல்லீரல் நோய் தடுப்பு குறித்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, அறுவைசிகிச்சை மற்றும் இரைப்பை குடலியல் முதுநிலை மருத்துவ ஆலோசகருமான டாக்டர். N. மோகன் பேசுகையில், “ஒருவர் கல்லீரலை ஆரோக்கியமாக வைப்பதற்கு, ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்றுவதுடன் தானியங்கள், புரதச்சத்துக்கள், பால் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், மற்றும் கொழுப்புகள் கொண்ட ஒரு சமச்சீர் உணவை உட்கொள் வேண்டும். மது, புகையிலை மற்றும் போதைபொருட்களை தவிர்க்க வேண்டும் மற்றும் அதே போன்று தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகும். ஒரு நோயாளி கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருக்கும்போது, அவருடைய உடல் ஒரு எஞ்சியிருக்கும் எரிபொருளில் ஓடும்  வாகனத்தைப் போன்றதாகும். வெளியிலிருந்து பார்க்கும்போது எல்லாம் சரியாக இருப்பதாகத் தோன்றும், ஆனால் எந்த நேரத்திலும் எந்த செயல்பாடும் திடீரென நின்றுபோகலாம். குறித்த நேரத்தில் கல்லீரல் மாற்று சிகிச்சை செய்வது உடலுக்கு ஒரு புதிய ‘இன்ஜினைக்’ கொடுப்பதுடன், வாழ்நாட்களை அதிகரிக்கவும் உதவுகிறது. கல்லீரல் நோய் அறிகுறிகளை கண்டறிவதற்குகுறிப்பிட்ட கால இடைவெளியில் கல்லீரல் செயல்பாடு குறித்த பரிசோதனைகளை (LFTs) மேற்கொள்வது நல்லது,” என்றார்.
முன்னதாக கண்டறிதல் மற்றும் பொது அறிகுறிகள் குறித்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, இரைப்பை குடலியல் மருத்துவ ஆலோசகர் டாக்டர். P L. அழகம்மை பேசுகையில், “கல்லீரல் நோய் சம்பவங்கள் அதிகரிப்பதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை முக்கிய காரணமாகும். கல்லீரல் நோய்க்கு பிற காரணங்களில் நோய் எதிர்ப்பு குறைபாடுகள், நுண்ணுயிரிகள், மரபியல் மற்றும் நச்சுப் பொருட்களுக்கான எதிர்வினைகள் ஆகியவையும் உள்ளடங்கும். கல்லீரல் நோய்களுக்கான பிற முக்கிய அறிகுறிகளில் சோர்வு, இயல்புக்கு மாறாக மலம் கழித்தல், பசியின்மை, அடர் நிறத்தில் சிறுநீர் கழித்தல், திடீர் எடையிழப்பு, குமட்டல், இரத்தத்துடன் கூடிய வாந்தி மற்றும் அடிவயிற்று உபாதைகள் குறிப்பிடத்தக்கச் சிலவாகும்,” என்றார்.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, அறுவை சிகிச்சை & இரைப்பை குடலியல் மருத்துவர் முதுநிலை ஆலோசகர் டாக்டர். N. மோகன் பேசுகையில், “கல்லீரல் நோய் முற்றும்போது, அது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்துவதுடன் இணைப்பு தசையழற்சியை விளைவிக்கிறது. மேலும், கல்லீரல் கரணை நோய் எனப்படும் கடும் கரணை ஏற்படுத்தப்பட்டு, அது மோசமடையும்போது கல்லீரல் செயலிழக்க நேரிடுகிறது.கவனிக்காமல் விடப்படும் கல்லீரல் கரணையே கல்லீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும். இது நாள்பட்ட ஹெபடைடிஸ் பி உள்ளவர்களிலும் ஏற்படக்கூடும்,” என்றார்.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, இரைப்பை குடலியல் மருத்துவ ஆலோசகர் டாக்டர். P L. அழகம்மை பேசுகையில், “ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை தவிர்த்து, சமச்சீர் உணவுடன்கூடிய ஆரோக்கிய வாழ்க்கை முறையை பின்பற்றவும். தானியங்கள், புரதச்சத்துக்கள், பால் பொருட்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் கொழுப்புகள் போன்ற அனைத்து உணவு பிரிவுகளிலிருந்து உணவு உட்கொள்ள வேண்டும். நார்ச்சத்துகள் நிறைந்த பழங்கள், காய்கறிகள், முழு தானிய ரொட்டிகள், அரிசி மற்றும் தானியங்களுடன் கூடிய சரிவிகித உணவுகளை உட்கொள்ள வேண்டும். உயர் கொழுப்பு உணவு வகைகளை தவிர்ப்பதுடன், மது அருந்துவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்,” என்றார்.
பொதுமக்களிடையே கல்லீரல் நோய் குறித்த விழிப்புணர்வு நிலை குறித்து டாக்டர்கள் பேசுகையில், “ஹெபடைடிஸ் பி மற்றும் சி வைரஸ் பரவும் முறை(பாதுகாப்பற்ற உடலுறவு, இரத்தம் ஏற்றுதல், கிருமித் தொற்று கொண்ட ஊசிகளைப் பயன்படுத்துதல் மற்றும் கர்ப்பத்தின் போது தாயிலிருந்து குழந்தைக்கு பரவுதல்), ஹெபடைடிஸ் பி க்கு தடுப்பூசி போடுதல், நோய்தொற்று உள்ளவர்களை தீவிரமாககண்காணித்தல் மிகவும் முக்கியமாகும். மேலும், முன்னதாக சிகிச்சைத்தொடங்குவது ஹெபடைடிஸ் தொடர்பான கல்லீரல் நோயை ஒழிப்பதற்கு பெரிதும் உதவக்கூடும், என்றனர்.