நிலக்கோட்டையில் விவசாயி தற்கொலை..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே இ . கோவில்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி (வயது 40). இவர் விவசாய வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவருக்கு அடிக்கடி குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனையில் இருந்த பழனிச்சாமி நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூச்சி மருந்தை வாங்கி குடித்து முயற்சி செய்த நிலையில் மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மனைவி பொன்னுத்தாய் கொடுத்த புகாரின் படி நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..