பத்திரிக்கையாளர்கள் தொடர் தாக்குதல் – ஜனநாயகத்தின் தூணை இடிக்க முற்படும் செயல்…பொன்பரப்பியில் செய்தியாளர் தாக்குதல் WJUT உட்பட பல தரப்பினர் கண்டனம்…

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் சமீப காலமாக பத்திரிக்கையாளர்களை தாக்கும் செயல் அதிகரித்த வண்ணம் உள்ளது.  இதில்   உள்ளூர் செய்தியாளர் முதல் தேசிய அளவிளான அனைத்து பத்திரிக்கையாளர்களும் உண்மையை மக்களுக்கு கொண்டு செல்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக தாக்கப்படுவது மிகவும் வேதைனயான விசயம்.  பத்திரிக்கை துறை என்பது ஜனநாயகத்தின் முக்கிய தூணாகும், பத்திரிக்கையாளர்களை தாக்குவது ஜனநாயகத்தின் தூணை இடிக்க முற்படுவதற்கு சமமாகும்.

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் 18 அரியலூர் மாவட்ட செய்தியாளர் தோழர் கலைவாணன் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தப்படுள்ளதை தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அ. ஜெ. சகாயராஜ் மற்றும் பொதுச் செயலாளர் ஆர். சந்திரிகா ஆகியோர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

சமீப காலமாக பத்திரிகை ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.நடந்த உண்மையை செய்திகளாக வெளியிடும் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகின்றனர். சில நாட்களாகவே தொடர்ந்து செய்தியாளர்கள் அரசியல் வாதிகளாலாலும் சில குண்டர்களாலும் தொடர்ந்து தாக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து கொண்டே உள்ளது மிகவும் கவலை அளிக்க கூடிய விஷயமாகும்.

தொடரும் ஊடக,பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களை அரசு கண்டும் காணாமல் இருப்பது ஏன்? நாம் பல முறை வலியுறுத்தியும் பத்திரிகையாளர்களை பாதுகாக்க தனி சட்டம் இயற்றாமல் இருப்பது ஏன்? இனி வரும் காலங்களில் இது போன்ற தாக்குதல்களை தடுத்து நிறுத்துமா? தாக்குதல் நடத்தும் நபர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்குமா? எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.

பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமா மத்திய மாநில அரசுகள்?

தோழர் கலைவாணன் மீது தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது அரசும் காவல்துறையும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவருக்கு உரிய இழப்பீடுகள் வழங்க வேண்டும் என்று தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் (WJUT) உட்பட பல்வேறு சங்கங்கள் கண்டனத்துடன் கோரிக்கையை வைத்துள்ளனர்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..