உயிர்பலி வாங்க காத்திருக்கும் பாதாளச் சாக்கடை கண்டுகொள்ளாத மதுரை மாநகராட்சி..

மதுரை மாநகராட்சி 29வது வார்டுக்கு உட்பட்ட பகுதி எல்லிஸ் நகர் மெயின் ரோடு சாலைமுத்து 3வது தெருவில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பாதாள சாக்கடை மூடி உடைந்து காங்கிரட் கம்பி தெரியும் அளவிற்கு உள்ளது.

அப்பகுதி மக்கள் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத மாநகராட்சி அதிகாரிகள் உயிர்பலி ஆன பிறகுதான் நடவடிக்கை எடுக்குமா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அப்பகுதி மக்கள் ஒருவர் விவேக் படத்தின் காமெடி ஒன்றைச் சொன்னார் அவர் கூறும்போது 500 ரூபாய்க்கு பாதாள சாக்கடை மூடியை போட்டு விட்டால் உயிர் பலியும் தடுத்துவிடலாம், தேவை இல்லாமல் ஒரு லட்ச ரூபாய் நிதியும் கொடுக்க வேண்டாம் என காமெடியாக இந்த வேதனையான விஷயத்தையும் சொன்னார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி நடவடிக்கை எடுப்பார்களா என கேள்வி எழுப்பியுள்ளார். பொறுப்பில்லாத மாநகராட்சி அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

செய்தி:- வி.காளமேகம்

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..