சித்திரை திருவிழாவை முன்னிட்டு சிறப்பாக நடைபெற்ற அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி..

மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் நேற்று முன்தினம் காலை அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் மதுரை வந்தார் நேற்று மாலை எதிர்சேவை முடிந்து தல்லாகுளம் பெருமாள் கோவிலில் தங்கி இருந்த அவர் இன்று காலை 5.50 மணியளவில் புறப்பட்டு கலை 6. 20 வைகை ஆற்றில் எழுந்தருளினார் இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்​.

கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து, வெள்ளை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்குவது ஸ்ரீராமானுஜர் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வந்தால் விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம். தங்கக் குதிரை வாகனத்தில் பவனி வந்த கள்ளழகரை பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

காவல்துறையின் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு..

சித்திரை திருவிழாவின் 12- ம் நாளான இன்று காலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இந்நிகழ்ச்சியின் பாதுகாப்பு பணிக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் இ. கா. ப. அவர்கள் 3000 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை நியமித்து சிறப்பான முறையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மதுரை மாநகர காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்கள் அனைவருக்கும் காவல் ஆணையர் தனது நன்றியை தெரிவித்தார்.

செய்தி.வி.காளமேகம்..

புனித ரமலான் வாழ்த்துக்கள்..