அழகர் ஆற்றில் இறங்கும் விழா… தயாராகும் மதுரை…

சித்திரை திருவிழாவில் முக்கியமான திருவிழாவானது கள்ளழகர் எதிர்சேவை.  நேற்று (17/04/2019)  அழகர்கோவில் மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார். இன்று (18/04/2019) எதிர் சேவையானது நடைபெற்றது. இதில் சுமார் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று இரவு தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கள்ளழகர் தங்கியிருந்து நாளை (19/04/2019) அதிகாலை காலை சுமார் 5.50 மணியிலிருந்து ஆறு 30க்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் மதுரையை சுற்றியுள்ள பகுதியில் உள்ள மக்கள் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான மக்கள் வைகை ஆற்றங்கரையில் குவிந்துள்ளனர். இப்பொழுது தல்லாகுளம் பகுதியில் கள்ளழகர் தரிசிக்க பல லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

செய்தியாளர் வி்.காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..