+2 தேர்ச்சியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் இராமநாதபுரம் மாவட்டம்..

இராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் +2 தேர்வில் 92.30 சதவிதம் தேர்ச்சி கடந்த வருடம் மாநில அளவில் நான்காம் இடத்தில் இருந்த தேர்ச்சி விகிதம் தற்போது 16ஆம் இடத்தில் உள்ளது.

2017ல் தேர்ச்சி விகிதம் 96.77 % ல் இரண்டாவது இடத்திலும். 2018 ல் தேர்ச்சி விகிதம் 95.88% சதவிதம் பெற்று நான்காவது இடத்திலும், (2019 ) ஆண்டு92.30% சதவித தேர்ச்சி பெற்று 16வது இடத்தில் மிகவும் பின் தங்கியுள்ளது.

அதே போல் கீழக்கரையில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சியை கண்டு வந்த பள்ளிகளும்  சிறிது சரிவு கண்டாலும், பல பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  மேலும் பள்ளி நிர்வாகத்தினர் பள்ளியின்  தேர்ச்சி விகிதம் மட்டுமே பள்ளியின் தரத்தையும், மாணவர்களின் திறமையையும் மாற்றிவிடாது, ஆனால் ஒவ்வொரு மாணவர்களின் தனித் திறமைகளை கண்டறிந்து அதற்கு தகுந்தார் போல் மெருகேற்றும் பொழுது பள்ளியின் பெயர் மற்றும் அங்கு படிக்கும் மாணவர்களின் எதிர்காலமும் சிறந்து விளங்க வாய்ப்பாக அமையும்.

அதே போல் மாற்றுத்திறனாளி மாணவர்களில் 2404 தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறைவாசிகளின் 34 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மிக முக்கியமாக இந்த பொது தேர்வில் 84.76% அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளது கவனிக்க வேண்டிய விசயமாகும். தனியார் பள்ளிகள் மட்டும்தான் தரமான கல்வியை தரும் என்ற எண்ணம் நீடித்து வரும் வேலையில் அரசு பள்ளியினரும் நல்ல சதவிகிதத்தில் தேர்ச்சி பெரும் செயல் பாராட்டுகுரியதாகும்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..