நிலக்கோட்டையில் பல்வேறு கட்சி தலைவர்கள் ஓட்டு பதிவு செய்தனர்…

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி  இடைதேர்தல் இன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில்  அதிமுக வேட்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ.தேன்மொழி சேகர், தி.மு.க. வேட்பாளர் சௌந்தரபாண்டியன்,அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்எல்ஏ தங்கதுரை மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சின்னத்துரை, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சங்கிலி பாண்டியன்,சுயேச்சைகள் உட்ப 20 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் 265 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த தொகுதியில் 113085 ஆண் வாக்காளர்களும், 116120 பெண் வாக்காளர்களும் 4 திருநங்கை வாக்காளர்கள் உட்பட மொத்தம் 229209 வாக்காளர்கள் உள்ளனர்.

அதிமுக வேட்பாளர் தேன்மொழி சேகர் நிலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அதேபோன்று திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் உதய குமார் தனது குடும்பத்துடன் வரிசையில் சுமார் அரை மணி நேரம் நின்று வாக்களித்தார்.. நிலக்கோட்டை திமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சவுந்தர பாண்டியன் வாக்குசாவடியில் வாக்களித்தார்.

அதே போன்று மக்கள் நீதி மய்யம்  வேட்பாளர் சின்னதுரை நிலக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி வேட்பாளர் தங்கத்துரை அக்கரகார பட்டி உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சங்கிலி பாண்டியன் சீதா புறத்தில் வாக்கு சாவடியில் வாக்களித்தார்

To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…