உசிலம்பட்டி ஒன்றிய பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்..

உசிலம்பட்டி ஒன்றிய பகுதிகளில் தேனி பாரளுமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தேனி பாராளுமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தங்கதமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். இந்நிலையில் உசிலம்பட்டி ஒன்றிய பகுதிகளான பூச்சிபட்டி, மெய்யனம்பட்டி, மாதரை, செட்டியபட்டி, நக்கலப்பட்டி போன்ற பகுதிகளில் தங்கதமிழ்ச்செல்வன் பொதுமக்களிடம் பரிசுபெட்டகம் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிகழ்ச்சியில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மகேந்திரன், தென்னிந்திய பார்வர்ட் ப்ளாக் மாநில்செயலாளர் சங்கிலி, ஒன்றிய செயலாளர் சேதுராமன் மற்றும் அனைத்து ஊர் கிளைச் செயலாளர்கள், மாணவரணியினர், மகளிரிரணியினர், தகவல்தொழில்நுட்ப பிரிவு, வழக்கறிஞர் பிரிவு, போக்குவரத்து தொழிற்சங்கத்தினர், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் அவருடன் சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடபட்டார்கள்.

To Download Keelainews Android Application – Click on the Image

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..