நிலக்கோட்டையில் ஜனநாயக ஆட்சி மலர திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தாருங்கள் வை.கோ. பேச்சு…

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நான்கு ரோட்டில் ,திண்டுக்கல் பாராளுமன்ற வேட்பாளர் வேலுச்சாமி, நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சௌந்தரபாண்டியன்  ஆகிய இருவருக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து மறுமலர்ச்சி திராவிட கழக நிறுவனரும் கழகப் பொதுச் செயலாளருமான வைகோ திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது,. இந்த தேர்தலில் ஜனநாயக மக்கள் ஆட்சி திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தந்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு, அரசியல் சட்டமேதை அம்பேத்கார் பிறந்த தினமான இன்றைக்கு உங்கள் மத்தியில் பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அது மட்டுமல்ல இன்றைக்கு தமிழ் புத்தாண்டு சித்திரை திருநாள் அனைத்து தரப்பு மக்களும் கோயிலுக்குச் செல்வது வழக்கம். இந்த நாட்டில் பாசிசக் கட்சியையும் மதவெறி பிடித்த கட்சியையும் இந்த நாட்டை விட்டு விரட்ட ஜனநாயம் காப்பாற்ற நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத் தேர்தலிலும் உதயசூரியன் சின்னத்தில் வாக்காளர்கள் வாக்களிக்க மாறும்,, கடந்த ஆண்டு தமிழகத்தை உலுக்கிய கஜா புயலில் 89 பேர் உயிரிழப்பு ஏற்பட்டது அதற்கு ஒரு சிறு அனுதாபம் கூட இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவிக்கவில்லை அதைப் புரிந்துகொள்ளுங்கள் போதும் வாக்காளர்களே., ராகுல்காந்தி மாதம் 6000 முதல் 12 மாதங்களுக்கு வருடத்திற்கு  72 ஆயிரம் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைப்பதற்கான திட்டத்தை வகுத்துள்ளார்கள். அதேபோன்று நீட் தேர்வை ஒழிக்கவும் தமிழ்நாட்டில் அடிமைகளாக இருக்கும் இந்த அடிமைகளை விரட்டவும் இப்படிப் பல்வேறு நிலையை தமிழகத்தை விட்டு அகற்றி விடவும், மத்தியில் ஒரு கூட்டாட்சியை ஏற்பட வாய்ப்பு தாருங்கள் என பேசினார்.

இந்தப் பிரச்சாரத்தின் போது திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஐ பெரியசாமி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மதிமுக மாவட்டச் செயலாளர் செல்வராகவன்,, நிலக்கோட்டை மதிமுக ஒன்றிய செயலாளர் ராஜா கொங்கர்குளம் பாண்டி  மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கூட்டணிக் கட்சியினர் பலர் இருந்தனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..