திருப்பரங்குன்றம் வருவாய் ஆய்வாளர் வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழக்கும் ஜந்துகள்…வீடியோ..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை அருகே திருப்பரங்குன்றம் வருவாய் ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் அணில்கள் மற்றும் சிறு உயிரினங்கள் மர்மமான முறையில் இறந்த வண்ணம் உள்ளன.

மேலும் திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் உயிரினங்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவையான உணவுப் பொருட்கள் எதுவும் கிடைக்காமல் தினம் தினம் பல விலங்கினங்கள் உயிரிழக்கின்றன.  இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..

Be the first to comment

Leave a Reply