காட்பாடி அருகே மழை வேண்டி வெகு விமர்சையாக நடைபெற்ற பால் குட ஊர்வலம்..

காட்பாடி அடுத்த மோட்டூர் நகர் பகுதியில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு திருவேங்கையம்மன் 39 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று காலை காப்பு கட்டு நடைபெற்று அதனை தொடர்ந்து மழை வேண்டியும் உலக அமைதிக்காகவும் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் விநாயகர் கோவிலில் இருந்து பம்பை மேளம் முழங்க பால் குடம் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக வந்து பக்தி பரவசத்துடன் திருவேங்கையம்மன் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.

மேலும்  2001 சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் மற்றும் மாங்கல்ய சரடு வழங்கும் நிகழவும் நடைபெற்றது. மேலும் இந்த அம்மனின் சிறப்பு அம்சம் என்ன வென்றால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் திருமண பாக்கியமும், குடும்பபிரச்னையும் தீரும் என்ற ஐதீகதுடன் மோட்டுரை சுற்றிலும் உள்ள பொதுமக்கள் திருவேங்கையம்மன் பக்தியுடன் வழிபட்டு வருகின்றனர்.

பால்குட ஊர்வலம் கழிஞ்சூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் சி.நரசிம்மன் தலைமையில் துவங்க தலைவர் டி.எஸ்..தேவராஜ், செயலாளர் வி.பி.ஜெயராமன், பொருளாளர் லோ.ஆறுமுகம், மற்றும் டி.பிச்சாண்டி கோ.சுப்பிரமணி டி.தயாளன் எஸ்.சந்தராமன் ஆகியோர் முன்னிலை வகித்து திருவிழாவை வெகு விமர்சையாக நடத்தினார்கள்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..