இராமநாதபுரத்தில் 16, 17, 18/4/19 மற்றும் 23/5/19 தேதிகளில் மதுக்கடைகள் மூடல்..

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2019, தமிழக சட்டமன்ற இடைத் தேர்தலை 18/4/2019இல் நடைபெறவுள்ளது. அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்கள், பரமக்குடியில் உள்ள உரிமம் பெற்று விடுதியில் இயங்கும் மதுக்கூடம், மண்டபத்தில் இந்திய கடலோரக் காவல் நிலையம், உச்சிப்புளி கடற்படை விமான தளம் ஆகியவற்றில் செயல்படும் ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினருக்கான கேன்டீன் ஆகியவற்றை 16, 17, 18/4/ 19 தேதிகளில் மூடவேண்டும்.

மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான 23/5/19 அன்றும் மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார்.

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..

Be the first to comment

Leave a Reply