தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி ஆண்டு விழா..

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி ஐந்தாம் ஆண்டு விழா நடந்தது. பள்ளியின் தலைவர் மாதவனூர் எம்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். தாளாளர் கணேச கண்ணன் வரவேற்றார். முதல்வர் முத்துக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.

திருவனந்தபுரம் வருமான வரி உதவி ஆணையர் எம்.பூவலிங்கம் சிறப்புரையாற்றி, மழலையருக்கு பட்டம் வழங்கி கவுரவித்தார். விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 வின்னர் ஆஜீத் காலிஹ் பாடல்கள் பாடி அசத்தினார். கல்வியில் மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி நடந்தது. செயலர் ஜீவ லதா நன்றி கூறினார்.

To Download Keelainews Android Application – Click on the Image

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..