அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி திமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள் மாலை அணிவிப்பு…

டாக்டர் அம்பேத்காரின் 128 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு அ ம மு க வேட்பாளர் டாக்டர் புவனேஸ்வரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த புரட்சியாளர்,  டாக்டர்  அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களால் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி தென்பாகம் காவல்  நிலையம் அருகில் உள்ள அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு இந்நிலையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் புவனேஸ்வரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் வடக்கு மாவட்ட செயலாளர்  ஹென்றி தாமஸ் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ், மற்றும் கட்சி நிர்வாகிகள் , தொண்டர்கள்  உடனிருந்தனர்.

அதே போல் டாக்டர் அம்பேத்காரின் 128 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர்  கனிமொழிகருணாநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் NP ஜெகன் பெரியசாமி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள்   உடனிருந்தனர்.

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..

Be the first to comment

Leave a Reply