Home செய்திகள்கீழக்கரை செய்திகள் பாஜக., ஆட்சியில் 50 கோடி இந்தியருக்கு தரமான மருத்துவம், இராமநாதபுரத்தில் பிரதமர் மோடி பெருமிதம்..

பாஜக., ஆட்சியில் 50 கோடி இந்தியருக்கு தரமான மருத்துவம், இராமநாதபுரத்தில் பிரதமர் மோடி பெருமிதம்..

by ஆசிரியர்

இராமநாதபுரத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அதிமுக., பாஜக., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது: கலாம் பிறந்த மகத்தான இப் புண்ணிய பூமியில் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்,

காசி பார்லிமென்ட் உறுப்பினராக இங்கு வந்துள்ளேன். அப்துல் கலாம் கண்ட கனவுகளை நிறைவேற்றும் இடத்தில் உள்ளோம். அவரது கனவுகளை நனவாக்கி இந்தியாவை புதிய யுக்தி புதிய வளர்ச்சியை எடுத்துச் செல்வோம். 2019 ல் இந்தியா 2014 விட மாறுபட்டுள்ளது. வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு துவங்கப்பட்டுள்ளது. காஸ் இணைப்பு மூலம் தாய்மார்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

50 கோடி இந்தியருக்கு தரமான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலா வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி அறிக்கையில் குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மே 23 மோடி அரசு மீண்டும் பொறுப்பேற்கும் போது நீர்வளத் துறைக்கு என தனி அமைச்சகம் உருவாக்கப்படும். மீனவர்கள் வாழ்வை மேம்படுத்த புதிய பாதை உருவாக்கி உள்ளோம். மீனவர்களுக்கு புதிய திட்டம் உருவாக்கப்படும். விஞ்ஞானம் மூலம் மீனவர்கள் பல நன்மைகள் அடைந்து வருகின்றனர். அவர்களுக்கு வட்டார மொழியில் தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மூக்கையூர், பூம்பு கார் துறைமுக ப பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாததால் அவர்கள் சர்வதேச கடல் எல்லை கடக்க வேண்டிய உள்ளது. தூக்கு தண்டனை வரை சென்ற தமிழக மீனவர்கள் 1,900 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேம்பாடு, அனைவருக்கும் மேம்பாடு, அனைவரும் இணைந்த மேம்பாடு குறிக்கோளாக கொண்டுள்ளோம். காங்., திமுக கூட்டணிக்கு நாட்டை பற்றிய சிந்தனை இல்லை. அவர்கள் இலக்கு மோடியை அகற்ற வேண்டும் என்பது மட்டுமே அவர்கள் ரத்தத்தில் ஊறி போய் உள்ளது. சர்ஜ்ஜில் ஸ்டிரைக் நடவடிக்கையின் போது, திமுக., காங்., கூட்டணி இந்திய ராணுவத்தை குறை கூறினர். காலம் மாறி விட்டது. பயங்கவாத தாக்குதலை அனுமதிக்க முடியாது. வாக்கு வங்கியை நோக்காக கொண்ட திமுக., காங்., கூட்டணி பேதம் பேசி வரு கின்றனர். சபரிமலை விவகாரத்தில் நம் நம்பிக்கையை அழிக்க முயல்கின்றனர். பாஜக இருக்கும் வரை அது நடக்காது. காங்., கண்ணோட்டம் வெட்கக்கேடானது. இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 356 ஐ காங்., பயன்படுத்தி எம் ஜி ஆர் அரசை கலைத்தனர். திமுக ஆட்சியையும் கலைத்துள்ளனர். காங்., திமுக., கூட்டணிக்கு வாக்களித்தால் குறைவான வளர்ச்சிக்கு வித்திடும். காங் கூட்டணியை வாக்களித்தால் அரசியலில் கிரிமினல் நுழைய வாய்ப்பளிக்கும். வலிமை மிக்க தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர் (சுகாதாரத் துறை), மணிகண்டன் (தகவல் தொழில் நுட்பத் துறை), அன்வர் ராஜா எம்.பி., பாஜக., வேட்பாளர்கள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் (தூத்துக்குடி), நயினார் நாகேந்திரன் (ராமநாதபுரம்), தேசிய செயலர் ராஜா (சிவகங்கை), அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் (நெல்லை), பரமக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக., வேட்பாளர் சதன் பிரபாகர், பாஜக., மாநில துணை தலைவர்கள் சுப.நாகராஜன், குப்புராமு, மாவட்ட தலைவர் முரளிதரன்,  கோட்ட பொறுப்பாளர் சண்முகராஜ், மாநில செயலர் பொன்.பால கணபதி, மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன், ராமநாதபுரம் அதிமுக., மாவட்ட செயலர் முனியசாமி, அவைத் தலைவர் முருகேசன்,பாமக மாவட்ட செயலர் அக்கீம், தேமுதிக., மாவட்ட செயலர் சிங்கை ஜின்னா, தமாகா., மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, வீர முத்தரையர் பேரவை தலைவர் செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!