உசிலம்பட்டியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்தி, ஜான் பாண்டியன் மற்றும் அமைச்சர் உதயகுமார் பிரச்சாரம்..

உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில் தேனி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்தை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். உசிலம்பட்டி அருகே அய்யனார் குளம் கிராமத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கூறினார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அய்யனார்குளம் கிராமத்தில் அதிமுக சார்பில் கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வருவாய்ததுறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர்ஆர்பி உதயக்குமார் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில் தேனி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்தை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினார். இந்நிகழச்சியில் முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் ஒன்றிய செயலாளர் ராஜா பண்பாளர் முன்னாள் சேர்மன் பவளக்கொடி ராசிகளை தமிழ்நாடு ஒலிம்பிக் குழு துணைத்தலைவர் சோலைராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் அமைச்சர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து நடிகர் கார்த்தி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் வேட்பாளர் ரவீந்திரநாதகுமாரை ஆதரித்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடிகர் கார்த்தி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தேர்தல் பிரச்சாரம் செய்தார். முன்னதாக அங்குள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை, உத்தப்புரம், செல்லாயிபுரம், டி.கிருஷ்ணாபுரம் பகுதியில் தேனி மக்களவைத் தொகுதி அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரவீந்திரநாத்தை ஆதரித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ஜான் பாண்டியன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பட்டியலினத்தவர்களில் உள்ள 7 பிரிவுகளை கொண்ட தெய்வேந்திர குலத்தினரை பட்டியலினத்திலிருந்து நீக்குவது மற்றும் தெய்வேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றி பிரதமர் மோடியும், தமிழக முதல்வரும் அறிக்கை வெளியிடவுள்ள நிலையில் இந்த மக்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..