Home செய்திகள்கீழக்கரை செய்திகள் பா.ஜ.க.,வுடன் நிரந்தர கூட்டணி வைக்கமாட்டேன் என ஸ்டாலினால் சொல்ல முடியுமா?.. டிடிவி கேள்வி..

பா.ஜ.க.,வுடன் நிரந்தர கூட்டணி வைக்கமாட்டேன் என ஸ்டாலினால் சொல்ல முடியுமா?.. டிடிவி கேள்வி..

by ஆசிரியர்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து அ.ம.மு.கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “மக்கள் விரும்பாத எடப்பாடி பழனிசாமி அரசையும்,தமிழகத்தை வஞ்சிகின்ற மோடி அரசையும் முடிவுக்கு கொண்டு வர இந்தத் தேர்தல் ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியினர்,  தி.மு.க.,மதச்சார்பற்ற கூட்டணி என்று அவர்களின் கூட்டணிக்கு பெயர் வைத்துள்ளார். மதங்களைப் பற்றி தேவையில்லாமல் பேசி குழப்பத்தை ஏற்படுத்துவதில் பா.ஜ.க.,விற்கு  இணையாக தி.மு.க.,வும் இறங்கிவிட்டது.

தற்போது தேர்தல் நெருங்கிவிட்டதால், எங்கள் வீட்டில் உள்ள  பெண்களும் கோயில்களுக்குச் செல்வார்கள் நாங்கள் இந்துக்களுக்கு எதிரிகள் அல்ல என ஒப்புதல் வாக்குமூலம்  அளித்துச் சமாளிக்கிறார். அதே போல இங்கு போட்டியிடும் தி.மு.க., வேட்பாளரான கனிமொழியும் திருப்பதி வெங்கடாஜலபதியை தவறாக பேசினார். ஆனால், அவரது தாயார் திருச்செந்தூர் முருகபெருமான் கோயிலுக்கு மகளின் வெற்றிக்காக சென்று சுவாமி கும்பிடுகிறார். யாரை ஏமாற்ற இந்த வேஷம் போடுகிறார்கள்.

ராகுல்காந்தி அறிவு முதிர்ச்சி இல்லாதவர் என பேசிவிட்டு இப்போது, ராகுல்தான் பிரதமர் என பேசி வருகிறார் ஸ்டாலின்.  . தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து அமைதியான முறையில் போராடிய மக்களை ஏதோ தீவிரவாதிகளைப் போல,மத்திய, மாநில அரசுகள் சுட்டுக் கொன்றன.

வேதாந்தா குழுமத்தின் எடுபிடிகள்தான் மத்தியில் ஆட்சியில் இருக்கிறார்கள். இங்கே தமிழகத்தில் இருப்பது மோடியின் எடுபிடி எடப்பாடி கம்பெனி. பா.ஜ.க.,வுடன் மறைமுக கூட்டணியில் உள்ளவர்கள்தான் தி.மு.க., பா.ஜ.க., வின் ஏ- டீம், அ.தி.மு.க., என்றால்,  பி – டீம்தான் தி.மு.க.தான். , இந்த இரு கட்சிகளுமே அரசியல் வியாபாரிகள். “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிரந்தர எதிரி தி.மு.க.,.  பா.ஜ.க.,வுடன் நாங்கள் எங்களின் வாழ்நாள் முழுவதும் கூட்டணி வைக்க மாட்டோம். இதே போல பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என ஸ்டாலினால் சொல்ல முடியுமா?” என்றார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!