உத்தரகோசமங்கை பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழா மற்றும் மாணவர் சேர்க்கை விழா…

உத்தரகோசமங்கையில் மாணிக்கவாசகர் தோற்றுவித்த பள்ளி அருகே அரசு தொடக்கப் பள்ளிக்கு கிராம மக்கள், முன்னாள் மாணவர்கள் சார்பாக மடிக்கணினி, பிரின்டர் மற்றும் கல்வி உபகரணங்கள் கல்விச் சீராக வழங்கப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் வாயில் முன்புறம் தொடங்கி ஊர்வலமாக கோயில் வடக்கு வாசலில் மரகத நடராஜர் சன்னதிக்கு அருகே தொடக்கப் பள்ளியில் கல்விச் சீர ஊர்வலம் நிறைவடைந்தது. விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் இரா.மாணிக்க ஜோதி தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியை கா.வெர்ஜின் லீலா வரவேற்றார்.

அரசுப் பள்ளிகள் வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை ஏப்ரலில் தொடங்க தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதன்படி 2019-20ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை திருப்புல்லாணி வட்டாரக் கல்வி அலுவலர் ஜெ.தங்க கனிமொழி தொடங்கி வைத்தார். போட்டிகளில் வென்ற மாணவ மாணவியக்கு பாராட்டு சான்றிதழை உத்தரகோசமங்கை காவல் சார்பு ஆய்வாளர் எல். சாரதா வழங்கினார். மின் வாரிய உதவி பொறியாளர் க.கனகராஜ், ராமநாதபுரம் தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் பங்கேற்றனர். மாணவ,மாணவியரின் கலை நிகழ்சி நடந்தது.

முன்னாள் மாணவர் மன்ற மாணவர்கள் அரசுப் பணி, மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் தனியார் நிறுவனங்களிலும் உயர் பொறுப்புகளில் உள்ள முன்னாள் மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். பள்ளி ஆசிரியர் வி.கே.சேக்கிழார் ஒருங்கிணைத்து நன்றி கூறினார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..