Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மதுரை ரயில் பயணிகளுக்கு உதவாத மின் படிகள்..

மதுரை ரயில் பயணிகளுக்கு உதவாத மின் படிகள்..

by ஆசிரியர்

தொடரும் அவலம்… மதுரை ரயில் நிலையத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் செல்கிறார்கள். ரயில் நிலையத்தில் ஒரு நடைமேடையில் இருந்து அடுத்த நடைமேடைக்கு செல்ல வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்காக எஸ்கலேட்டர் (மின் படிகள்)  உள்ளது.  

ஆனால் அது எப்பொழுதாவது வேலை செய்ததா?? என்று கேட்டால், “எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இல்லை” என்ற பதிலை எதிர்பார்க்கலாம். காரணம்  மாதத்தில் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள்  மட்டுமே பயன்பாட்டில் உள்ளது மற்ற நாட்கள் முழுவதும் பழுதடைந்த நிலையிலேயே உள்ளது.  இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.  பலமுறை ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  ஒரு சில பயணிகள் மிகவும் சிரமப்பட்டு சுமார் 70 அடி உயர படியில் ஏற டிய நிலை ஏற்படுகிறது. இதனால் மாற்றுத்திறனாளிகளும்,  சுமைகள் அதிகமுள்ள பயணிகளும் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!