Home செய்திகள்கீழக்கரை செய்திகள் நிதி மோசடி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் சலுகை அளித்தவர் மோடி பரமக்குடியில் வைகோ குற்றச்சாட்டு..

நிதி மோசடி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் சலுகை அளித்தவர் மோடி பரமக்குடியில் வைகோ குற்றச்சாட்டு..

by ஆசிரியர்

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி, பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரசார பொதுக் கூட்டம்  பரமக்குடியில் நடந்தது.

இதில் மதிமுக பொதுச் செயலர் வைகோ பேசியதாவது: மணல் ஊழலில் சிக்கிய தமிழக அரசின் தவறான அணுகுமுறையால் தமிழகத்தில் நிறுவ இருந்த ஏராளமான வெளிநாட்டு கார் தொழிற்சாலைகள் வட மாநிலங்களுக்கு சென்றன. திமுக., தேர்தல் அறிக்கையில் அறிவித்த நீட் தேர்வு ரத்து, ராகுல் காந்தி வெளியிட்ட காங்., தேர்தல் அறிக்கையிலும் பிரபலித்துள்ளது. கூட்டுறவு, கல்வி மற்றும் அனைத்து விவசாயக் கடன்கள் ரத்து. தமிழக உரிமைகளை காக்கவும், கூட்டாட்சி தத்துவத்தை மதிக்கவும் மாநில கட்சிகள் அங்கம் வகிக்கும் மத்திய அரசு ராகுல் காந்தி தலைமையில் அமையும். அனைத்து சமயங்கள், மதங்களை சமநோக்கு கண்ணோட்டத்துடன் திமுக., பார்த்து வருகிறது. திமுக., ஆட்சியில் தான் 6 ஆயிரம் கோயில்களில் திருப்பணிகள் நிறைவேற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்பது. மத்திய அரசு நிதி ரூ.100 கோடியில் கோயில்கள் பராமரிக்கப்பட்டன. 27 கோயில்களுக்கு தங்கத்தேர் வழங்கப்பட்டது. பிரதமர் மோடி இந்திய மக்களுக்காக ஆட்சி நடத்தவில்லை. மாறாக, கர்ப்பரேட் முதலாளிகள் செல்வம் கொழிக்கும் ஆட்சி நடத்தினர் என நான் குற்றம் சாட்டுகிறேன்.

விஜய் மல்லையா ரூ.9,500 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி ரூ.13,500 கோடி, விஜய் கோத்தாரி ரூ.3,850 கோடி, ஆந்திர வங்கியில் நிதின் சர்வேஷ் ரா ரூ.8,750 கோடி நிதி மோசடி செய்து வெளிநாடுகளுக்கு தப்பி ஓட வைத்து கார்ப்பரேட முதலாளிகளுக்கான பாஜ ஆட்சி என மோடி நிரூபித்துள்ளார். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ரூ.5 லட்சம் கோடி வரிச்சலுகை, ரூ.2.42 லட்சம் கோடி கடன் தள்ளுபடி மோடி அரசு செய்துள்ளது. பாஜ தலைவர் அமித் ஷா பெயரை கேட்டால் இபிஎஸ், ஓபிஎஸ்-க்கு அங்கம் நடுங்குகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை எதிர்ப்பு போராட்டத்தில் மத்திய அரசு கட்டளையை அப்படியே நிறைவேற்றி அப்பாவிகள் 13 பேரை துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாக்கிய மகாபாதக அரசை அகற்ற வேண்டும். வருங்கால சந்ததிகள் வளமாக வாழ , ஜிஎஸ்டி வரி விதிப்பால் தொழில் பாதிப்பில் இருந்து வணிகர்கள் விடுபட தமிழக அரசை அகற்றி மக்களுக்கான நல்லரசு அமைய மத சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!