Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்கு கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி முறைநபர் ஒதுக்கீடு..

இராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்கு கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி முறைநபர் ஒதுக்கீடு..

by ஆசிரியர்

நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல்-2019 பணிகளுக்காக, பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 302 வாக்குச்சாவடி மையங்கள், திருவாடானை சட்டமன்ற தொகுதியில் 346 வாக்குச்சாவடி மையங்கள், ராமநாதபுரம் சட்டமன்ற  தொகுதியில் 336 வாக்குச்சாவடி மையங்கள், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 383 வாக்குச்சாவடி மையங்கள் என 1,367 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 23 வேட்பாளர்கள், பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதன்படி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவில் ஒரு வாக்குச்சாவடி மையத்தில் தலா 2 வாக்கு செலுத்தும் இயந்திரங்கள் (பேலட் யூனிட்), பரமக்குடி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் ஒரு வாக்குச்சாவடி மையத்தில் தலா 1 வாக்கு செலுத்தும் இயந்திரம் (பேலட் யூனிட்) பயன்படுத்தப்படவுள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நாளன்று பயன்படுத்துவதற்காக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய கணக்கு படி, வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கையிலிருந்து, வாக்குச்செலுத்தும் இயந்திரங்கள் 20 சதவீதமும், வாக்குப்பதிவு இயந்திரம்17 சதவீதமும், வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரம் 28 சதவீதமும் கூடுதலாக  ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

அதனடிப்படையில்முதல்நிலை பரிசோதனை நிறைவேற்றப்பட்டு 3,501 வாக்குப்பதிவு இயந்திரங்கள் 1,966 வாக்குச் செலுத்தும் இயந்திரங்கள், 2,154 வாக்காளர் சரிபார்ப்புஇயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் பயன்படுத்துவதற்காக,பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு 364 வாக்குச்செலுத்தும் கருவிகள், 355 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 388 வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள், திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு 416 வாக்குச்செலுத்தும் கருவிகள், 405 வாக்குப்பதிவு  இயந்திரங்கள், 443 வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு 404 வாக்குச்செலுத்தும் கருவிகள், 394 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 431 வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 460 வாக்குச்செலுத்தும் கருவிகள், 449 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 491 வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்வதற்கான கணினி முறை ஒதுக்கீடு மார்ச் 25ல் நடந்தது.

பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகளுக்காக 302 வாக்குச்சாவடி மையங்களுக்கு, 364 வாக்குச்செலுத்தும் கருவிகள், 355 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 388 வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்வதற்கான கணினி முறை ஒதுக்கீடு மார்ச் 25 ல் நடந்தது. அதன் தொடர்ச்சியாக வேட்பாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவில் பயன்படுத்துவதற்கு கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முறையே மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்வதற்கான கணினி முறை ஒதுக்கீடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தலைமையில்அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்தது.

இந்த கணினி முறை ஒதுக்கீடு அடிப்படையில் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு 364 வாக்குச்செலுத்தும் கருவிகள், 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3 வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள், திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு 416 வாக்குச்செலுத்தும் கருவிகள், 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3 வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு 404 வாக்குச்செலுத்தும் கருவிகள், 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3 வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 460 வாக்குச்செலுத்தும் கருவிகள், 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4 வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான பொறுப்பு அலுவலர் ரவிச்சந்திரன் உட்பட அரசு அலுவலர்கள், அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!