முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு கல்லூரி விழா…

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு கல்லூரி விழா இன்று (05.04.2019) காலை 10.00 மணி அளவில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வை ஆங்கிலத் துறையைச் சார்ந்த முதலாமாண்டு மாணவி s.பாத்திமா மரியம் இறைவணக்கத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் Dr. A.R.நாதிரா பானு கமால் அனைவரையும் வரவேற்று, மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் கூறியும் கல்லூரி ஆண்டு அறிக்கை வாசித்தும் வரவேற்புரை ஆற்றினார்.

முகம்மது சதக் நிறுவனத்தின் சார்பாக சிறப்பு விருந்தினர் S.நாகூர் அலி ஜின்னா, நிதி ஆலோசகர், நிதித்துறை, தமிழ்நாடு அரசு. அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் மாணவிகளிடம் இறைவனையும், பெற்றோரையும், நண்பர்களையும் நேசிக்குமாறும், “படைத்தவனை யாசி படைக்கப்பட்டவனை நேசி” எனக் கூறி சிறப்புரை ஆற்றினார்.

மேலும் கல்லூரியில் நடைப்பெற்ற கலை மற்றும் விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றிப் பெற்ற மாணவிகளுக்கும் பேராசியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அனைத்து ஊழியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. J.முகம்மது ஜகாபர் முகம்மது சதக் பொறியியல் கல்லூரி டீன், J.அப்பாஸ் முகைதின் முகம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர், திரு. ரஜபுதின்,  செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்,   திரு.நந்தக்குமார், முகம்மது சதக் தஸ்தகிர் பள்ளி முதல்வர், திருமதி.ஆலியா முகம்மது சதக் கபீர் CBSC பள்ளி, A.பாத்திமத்துல் ஜின்னா  ஆகியோர் விழாவில் கலந்துக் கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

கல்லூரி விழாவினை அலுவலக மேற்பார்வையாளர் குத்புதீன் சிறப்பாக ஒருங்கிணைத்தார். இறுதியாக கணினி பயன்பாட்டியல் துறைத்தலைவர் அன்வர் ரொ.சாஹின் நன்றியுரையை தொடர்ந்து, அரபித் துறைத் தலைவர் M.ரெய்ஹானத்தில் அதவியா தூஆவுடன் இந்நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..