Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தென்காசி தொகுதியில் குழப்பத்தில் அதிமுக கூட்டணி..

தென்காசி தொகுதியில் குழப்பத்தில் அதிமுக கூட்டணி..

by ஆசிரியர்

தமிழகத்தில் தற்போது தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்தை தீவிர படுத்தி உள்ளனர். நெல்லை மாவட்டம் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் திமுக கட்சியை சார்ந்த தனுஷ் குமார் போட்டியிடுகிறார்.

அதே நேரத்தில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இந்நிலையில் திமுக வேட்பாளர் தனுஷ் குமார் கடந்த சில நாட்களாக தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதிமுக சார்பில் பிரச்சாரம் மிகவும் மந்தமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் கிருஷ்ணசாமி நேற்று முதல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நேற்று மாலை 5 மணிக்கு அமைச்சர் ராஜலெட்சுமி, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் ஆகியரோடு இனைந்து கிருஷ்ணசாமி சுரண்டை பகுதியில் பிரச்சாரம் தொடங்கி திருசிற்றம்பலம், சுந்தரபாண்டியபுரம், கீழப்புலியூர், தென்காசி நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து கீழப்புலியூர், தென்காசி நகர் பகுதிகளில் மாலை 7 மணி முதல் கூட்டணி கட்சி தொண்டர்கள் கூடி இருந்தனர்.

இந்நிலையில் 10 மணி வரை அவர் வரததால் தொண்டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இது அவர்களிடையே சிறிது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கூட்டணி கட்சிகளின் பிரச்சாரமோ பெரும் மந்தமாகவே உள்ளது. உரிய நேரத்தில் வராமால் வாக்காளர்களை ஏமாற்றி இருப்பது கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அதிமுக கூட்டணியில் கட்சியினரிடையே முழுமையான ஒத்துழைப்பு இல்லாமல் தகவல்கள் பரிமாற்றமின்றி தவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் தென்காசி தேர்தல் அலுவலகத்தில் நேற்று மாலை 5மணிக்கு ஆலோசனைக்கூட்டம் என்று அறிவித்த நிலையில் அனைத்து கட்சியினரும் திரண்டு வந்து வேட்பாளரும் இரவு 7.30 மணி வரை வரவில்லை. சட்டமன்ற உறுப்பினரும் வரவில்லை அதன் பின்னர் வேட்பாளரும், சட்டமன்ற உறுப்பினரும் வந்து பிறகே கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஆலோசனைகள் நடக்காமல் சட்டமன்ற உறுப்பினரின் சாதனையைத்தான் அவர் பேசினார். பல்வேறு குழப்பங்களை தாண்டி அதிமுக கூட்டணியினர் இரட்டை இலையை வெற்றிபெற வைக்க கடுமையாக போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலை தொடரும் பட்சத்தில் நோட்டாவே அதிமுக கூட்டணியை விட அதிக வாக்குகளை பெறும் என்பதில் ஐயமில்லை.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!