நிலக்கோட்டை சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் மேற்பார்வையாளர் தலைமையில் அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம்..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 18-ஆம் தேதி நடக்கிறது. தேர்தலுக்காக வருவாய் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இதனை பார்வையிடுவதற்காக மணிப்பூரிலிருந்து தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் மேற்பார்வையாளர் ஜோசப் பவுலிங் கம்சன்  வருகை தந்தார்.

அவர் தலைமையில் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள், தற்போது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜீனத்பானு முன்னிலை வகித்தார்.. நிலக்கோட்டை தாசில்தார் நவநீதகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.. கூட்டத்தில் தற்போ தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் அனைவரும் தேர்தல் ஆணையம் விதிகளுக்கு தகுந்தார் போன்று தகுந்த ஒத்துழைப்பு கொடுக்கும் படியும், ஒரு வேட்பாளர் பிரச்சாரம் செய்யும் போது மற்றொரு வேட்பாளர் வந்து விட்டாலோ அல்லது வருவது தெரிந்தாலும் தேர்தல் அதிகாரி கொடுத்த நேரத்திற்குள் முடித்து ஒத்துழைப்பு கொடுக்கும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டது..

கூட்டத்தில் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக செங்கோட்டையைச் சேர்ந்த புரட்சிமணி என்பவர் போட்டியிடும் தேர்தல் மேற்பார்வையாளர் ஜோசப் பவுலிங் கம்சனிடம் ஒரு புகார் மனுவை கொடுத்தார். அந்த புகார் மனுவில் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் டாக்டராக பணி புரியும் சேகர் என்பவர் தி.மு.க. வேட்பாளர் சௌந்தரபாண்டியன் என்பவருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதாக தெரிவித்திருந்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..