கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் முப்பெரும் விழா…

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் இந்திய தொழில்நுட்ப கழகம் மற்றும் இந்திய பொறியாளர்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய முப்பெரும்விழாவான பணிநியமன ஆணை வழங்கும் விழா இந்திய தொழில்நுட்பக்கழக மாணவர் கூட்டமைப்பு விழா மற்றும் சாதனையாளர் விருது வழங்கும் விழா 30.03.2019 அன்று முஹம்மது சதக் அறக்கட்டளை தலைவர் முஹம்மது யூசுப் மற்றும் செயலாளர் சர்மிளா தலைமையில் நடைபெற்றது.

கல்லூரி டீன் முஹம்மது ஜஹபர் மற்றும் கல்லூரி முதல்வர் அப்பாஸ் மைதீன் முன்னிலை வகித்தனர். இந்திய பொறியாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விஜயராஜ் அனைவரையும் வரவேற்றார்.

​கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் மைதீன் தலைமையுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக கொல்கத்தா இந்திய பொறியாளர்கள் கூட்டமைப்பின் முன்னாள் துணை தலைவர் ராஜாமணி கலந்து கொண்டு சிறந்த ஆராய்ச்சிகளுக்கு தேவையான நிதியுதவிகளை எப்படி பெறுவது என்பது குறித்து சிறப்பாக எடுத்துரைத்தார்.

இந்த பணிநியமன ஆணை வழங்கும் விழாவில் 77 மாணவர்களுக்கு பல்வேறு கம்பெனிகளில் இருந்து குறிப்பாக (Elcamino Software pvt ltd., Wind Care india pvt ltd., Excelacom technologies, New All Engineering Company, JKPM Precision Controller.,) பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

அண்ணாபல்கலைக்கழக தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கும்இ கல்லூரியின் ஒவ்வொரு துறையிலும் கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளக்கிய 600 மாணவ மாணவிகளுக்கும் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

மேலும் அண்ணா பல்கலைக்கழக தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தந்த பேராசிரியர்களுக்கும் கல்லூரியியல் சிறப்பாக பணியாற்றிய அனைத்து பணியாளர்களுக்கு ஊக்கப் பரிசுகளும் சான்றிதழ்களும் கல்லூரி முதல்வர் அவர்களால் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் முன்னாள் மாணவர்கள் சுப்பிரமணியன், WISE Management, Coimbatore, துரைபாண்டி, ConstructionEngineer, Chennai அரந்தாங்கி ஆகியோர் கலந்து கொண்டு 14 மாணவர்களுக்கான சிறப்பு உதவித்தொகை காசோலையை அந்தந்த மாணவர்கள் பெயரிலேயே வழங்கினார்கள்.

இவ்விழாவில் முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர். சதீஸ்குமார்  நன்றியுரை வழங்கினார்.

​விழாவிற்கான ஏற்பாடுகளை அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..