பாசிசமா – ஜனநாயகமா என்பதை சிந்தித்து வாக்குகளியுங்கள் – தூத்துக்குடியில் மதிமுக பொது செயலாளர் வைகோ பேச்சு..

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை  ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்  மதிமுக பொது செயலாளர் வைகோ.  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை  ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்  வி.வி.டி.சிக்னல்  நடைபெற்றது.

வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் தலைமை தாங்கினார் . மதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் ஆர் எஸ் வி ரமேஷ் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் வைகோ பேசுகையில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக மீனவர்களுக்காக விவசாயிக்காக வேலை இல்லா திண்டாடத்தால் தினரும்  பட்டதாரி இளைஞர்களாக சுற்றுச் சுழல் பாதுகாக்க  பெண்ணடிமையை தவிர்ப்பதற்காக மாநிலங்களவையில் குரல் கொடுத்தவர்கள்  கனிமொழி அவர்கள். தூத்துக்குடியில் மே 22 நடைபெற்ற சம்பவம் கறுப்பு தினம். தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு திட்டமிட்டு நடைபெற்ற சம்பவமாகும். காவல்துறை கூலிபடைகளாக மாற்றப்பட்டனர் . இதற்கான தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள் ஹைட்ரோ கார்பனும் மீத்தேனும் எடுத்தால் 19 மாவட்டங்கள் பாதிக்கப்படும் எனவே வாக்களர்களே உங்கள் பாதங்களை தொட்டு கேட்கிறேன். பாசிசமா ஜனநாயகமா என்பதை சிந்தித்து வாக்களியுங்கள்  கனிமொழியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறினார்.

முன்னதாக கனிமொழி பேசுகையில்  ஸ்டெர்லைட் எதிர்த்து கடந்த 20 ஆண்டுக்கு மேலாக போராடும்  அண்ணன் வைகோ ஒரு போராளி. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாள் போராடினார்கள் மக்கள் , 100 வுது நாள் 13 பேரை சுட்டுக்கொல்லபட்டனர்.  இது குறித்து ஆய்வு அறிக்கை வெளியிட பல பிரச்சனை செய்தார்கள் இந்த அ.தி.மு.க அரசு. முகிலன் என்ற தோழர் ஸ்டெர்லைட் படுகொலை குறித்து அறிக்கை ஒன்றை  வெளியிட்டார் , ஆனால் இன்று அவர் எங்கு இருக்கிறார் என்றுகூட தெரியவில்லை யார் இவர்களை எதிர்த்து நியாயம் கேட்டாலும் இந்த மண்ணில் வாழ முடியாது என்ற நிலையை அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து செயல் படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் போராடும் விவசாயிகளை மோடி ஒரு நிமிடம் கூட  சந்திக்க வில்லை, வருடத்திற்கு 21 ஆயிரம் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிப்பு அடைந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள். விவசாயிகளின் கடனை ரத்து செய்ய 72 ஆயிரம் கோடி இருந்தால் போதும் ஆனால் ஸ்டெர்லைட் நடத்தும் வேதாந்தா நிறுவனத்துக்கு 1.3 லட்சம் கோடி இந்த பா.ஜ.க ஆட்சி வங்கியின்மூலம் கடன் வழங்கியுள்ளது. இதுல இருக்கக்கூடிய நியாயத்தை சிந்துத்துபாருங்கள். இவர்களுக்காக 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  மத்திய அரசில் வேதாந்தா நிறுவனம் அங்கமாக இருக்கிறது என்றார் அவர். 

கூட்டத்தில்  திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் பொதுக்குழு உறுப்பினர் என்.பி. ஜெகன், மதிமுக மாநகர செயலாளர்  முருகபூபதி ,காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், மா.கம்யூ மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், இ.கம்யூ மாவட்ட செயலாளர் அழகு முத்துப்பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் அகமது இக்பால், வடக்கு மாவட்டச்செயலாளர் கதிரேசன், இ.யூ.மூஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மோத்தி, சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ், மனித நேய ஜனநாயக கட்சி பாராளுமன்ற பொறுப்பாளர் உசேன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் கிதர்பிஸ்மி, ஆதித் தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் செண்பகராஜ், ஆதித் தமிழர் கட்சி வினோத் மாவட்ட செயலளர் சங்கர் உட்பட தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..