Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தி மு க ஆட்சிக்கு வந்தால் இராமநாதபுரம் மாவட்டத்துக்கு மருத்துவ கல்லூரி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். : கனிமொழி பேச்சு

தி மு க ஆட்சிக்கு வந்தால் இராமநாதபுரம் மாவட்டத்துக்கு மருத்துவ கல்லூரி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். : கனிமொழி பேச்சு

by ஆசிரியர்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கனிமொழி கருணாநிதி MP 21.03.2019 அன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் நவாஸ் கனி அவர்களுக்கு ஏணி சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், “நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம் சரியாக செயல்படுத்துவது இல்லை, ஊதியம் சரியாக வங்கியில் செலுத்துவதில்லை. இத்திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று பா.ஜ .க செயல்படுகின்றது என்று குற்றம் சாட்டினார்.

கருப்பு பணம் ஒழிப்பேன் ஆட்சிக்கு வருவதற்கு முன் நரேந்திர மோடி கூறினார் ஆனால் செய்தாரா? மாறாக பணம் மதிப்பிழப்பு செய்தார் இரவோடு இரவாக இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளனது” என்றார் கனிமொழி. வேலைவாய்ப்பு இல்லாமல் படித்த இளைஞர்கள் பாதிப்புக்குள்ளயினார்கள். இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவோம் என்று பொய் சொல்லி ஆட்சிக்குவந்தார்கள். ஆனால் பா.ஜ .க ஆட்சியில் பெரும் முதலாளிக்காக மட்டும் ஆட்சி நடத்தி கொண்டுருக்கிறார்கள். நாட்டு மக்களுக்கு என்ன செய்தார்கள் ? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் இங்கு பா. ஜ. க வின் பினாமி ஆட்சியாக அ தி மு க வின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நீட் தேர்வு கொண்டுவந்து தமிழ் நாட்டில் திணித்தார்கள். இதை எதிர்க்க இந்த ஆட்சிக்கு துப்பில்லை. கலைஞர் ஆட்சியில் அனைத்து மாவட்டத்துக்கு மருத்துவ கல்லூரி இருக்கவேண்டும் என்று நினைத்தார் , தி மு க ஆட்சிக்கு வந்தால் இராமநாதபுரம் மாவட்டத்துக்கு மருத்துவ கல்லூரி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஏழு ஆண்டுகளாக, பொள்ளாச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள் ஆனால் இந்த ஆட்சி குற்றவாளிகளை காப்பாற்ற துடித்து கொண்டிருக்கின்றது. தி மு க போராட்டம் நடத்திய பின்னரே குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மோடி தலைமையிலான ஆட்சி ஆர்.ஸ். ஸ் யின் கொள்கைகளை திணித்து மக்களுக்கு இடையே மதத்தின் பெயரால் பிரிவினை உண்டாக்கின்றனர். நாம் சகோதர சகோதரிகள் போல் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் ஆனால் இந்த பா ஜ க ஆட்சி கலவரம் உண்டாகி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

இங்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை, பனை விவசாயிகளுக்கு சந்தை , மீன்பிடி துறைமுகம் அமைக்க தி மு க ஆட்சிக்கு வந்தஉடன் செய்துதரப்படும். அரசு உப்பு நிறுவனத்தை தனியார் மையமாக முயற்சி செய்கிறார்கள், இதனை தி மு க ஆட்சிக்கு வந்தவுடன் தடுத்து நிறுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைத்து தமிழகத்தை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும். இங்கு அ.தி.மு.க ஆட்சி அகற்றப்பட வேண்டும், தளபதி தலைமையில் ஆட்சி அமைத்து அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று சொன்னார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!