இராமநாதபுரத்தில் பல்வேறு இடங்களில் ரூ.4.47 லட்சம் மற்றும் பொருட்கள் பறிமுதல்..

இராமநாதபுரம் சட்ட மன்ற தொகுதி பறக்கும் படை அலுவலர் அருள் முனியப்ப தாஸ், சிறப்பு எஸ் ஐ ., இளங்கோவன் தலைமையில் குழுவினர் ராமநாதபுரம் பட்டணம் காத்தான் சோதனை சாவடியில் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ராமேஸ்வரம் சென்ற கேரள பதிவெண் சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வந்த திருவனந்தபுரம் மூந்தூரா பகுதி கலீல் என்பவர் எடுத்துச் சென்ற ரூ.1.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர். கேரளா மார்க்கெட்டில் வியாபாரத்திற்காக பாம்பனில் மீன் வாங்க வந்ததாக கூறினார்.

பரமக்குடி  மரிச்சுக்கட்டி போலீஸ் சோதனைச் சாவடியில்
பரமக்குடி சட்டசபை தொகுதி பறக்கும் படை தேர்தல் அலுவலர் சண்முகவேல், சிறப்பு எஸ்.ஐ., சந்தவழியான் அடங்கிய குழு அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர் . அதில் ரூ.17,490 மதிப்பில் ஆண்கள் அணியும் 72 ரெடிமேடு சட்டைகள் எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. வியாபாரத்திற்காக வாங்கிக் கொண்டு காரில் வந்ததாக கூறிய சாத்தான்குளம் சபீர் அலியிடம் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

சாயல்குடி -புல்லந்தை விலக்கு ரோட்டில்முதுகுளத்தூர் தொகுதி பறக்கும் படை அலுவலர் அமர்லால், சிறப்பு எஸ். ஐ.. குமரேசன் தலைமையிலான குழுவினர்  அதிகாலை சோதனை செய்தனர். அப்போது அது வழி சென்ற டிஎன் 31 பதிவெண் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். லாரியில் பயணித்த ஆந்திரா கடப்பா ஜில்லாவைச் சேர்ந்த ரவீந்திர ரெட்டி ரூ.1.40 லட்சம் எடுத்துச் சென்றது தெரிந்தது. தூத்துக்குடியில் ஜிப்சம் வாங்குவதற்கு பணத்துடன் வந்ததாக கூறினார்.

இராமநாதபுரம் சட்ட மன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் கருப்பையா, சிறப்பு எஸ்.ஐ., நாகராஜன், தலைமை காவலர் திருநாகசுந்தரம் ஆகியோர் கொண்ட குழுவினர் ராமநாதபுரம் வாலாந்தரவை அருகே வழுதூர் விலக்கு ரோட்டில் இன்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நெல்லை பதிவெண் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சென்ற நெல்லை கருங்குளம் சங்கர தங்கபாண்டி ஆவணமின்றி எடுத்து வந்த ரூ 1.54 லட்சத்தை பறிமுதல் செய்தனர். முத்துப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி கட்டுமான பணிக்கு பொருட்கள் வாங்க பணம் கொண்டு வந்ததாக கூறிய தங்கபாண்டியிடம் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..