நாடாளுமன்ற தேர்தலையொட்டி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு..

சென்னை அம்பத்தூர் காவல் மாவட்டம் சார்பில் துணை ராணுவம் மற்றும் காவல்துறையினர் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் இணைந்து அம்பத்தூர் பேருந்து நிலையம் முதல் வடக்கு பூங்கா சாலை வழியாக அம்பத்தூர் நகரின் மிக முக்கிய பிரதான சாலை புதூர் வழியாக ராக்கி திரையரங்கம் வரை சுமார் 4 கிலோமீட்டர் வரை பிரமாண்ட அணிவகுப்பு 20.03.19 இன்று சிறப்பாக நடைபெற்றது.

அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் திரு. D. ஈஸ்வரன் அவர்களின் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த கொடி அணிவகுப்பில் அம்பத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி பொற்கொடி கலந்து சிறப்பித்தார்.

இந்த அணிவகுப்பில் 100 க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் மற்றும் 50 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..