மணல் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது ..

நேற்று (19.03.19) C3 S.S.காலனி சார்பு ஆய்வாளர் திரு.ஆதீஸ்வரன் மற்றும் காவலர்களுடன் மதுரை கோச்சடை மெயின்ரோடு, பாஸ்போர்ட் ஆபிஸ் முன்பாக வாகன சோதனையில் இருந்தபோது TN 69 E 9036 என்ற லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அரசு அனுமதியின்றி லாரியில் மணல் ஏற்றிவந்த இருவரை கைது செய்தனர்.

அதே போல் மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத்தெருவைசேர்ந்த கமலகண்ணன் 35/19 மற்றும் C3 S.S.காலனி சார்பு ஆய்வாளர் திரு.சரவணன் மற்றும் காவலர்களுடன் மதுரை கோச்சடை மெயின்ரோடு செவன்த்டே ஸ்கூல் முன்பாக வாகன சோதனையில் இருந்தபோது TN 57 W 8601 என்ற TATA ACE வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அரசு அனுமதியின்றி லாரியில் மணல் ஏற்றிவந்த மதுரை அச்சம்பத்தைச்சேர்ந்த மாணிக்கம் 43/19 ஆகிய இரண்டு நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு லாரிகள் மற்றும் மணல் பறிமுதல் செய்யப்பட்டு இன்று (20.03.2019) இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image